சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் புதன் சேர்க்கையை உண்டாக்கும்: சில ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) சிறப்பாக இருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அனுகூலமான பலனை தரும். அதேபோல் தொழிலில் நல்ல வெற்றியைத் தரும். எனவே தற்போது கன்னி ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாக இருக்கிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் கன்னி ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் கீழ்கண்ட ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிராகாசிக்க உதவும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் கிடைக்கும் பலன்:
செப்டம்பர் மாதத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். வணிக வர்க்கம் பெரும் பலன் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். அதிர்ஷ்டத்தைத் தரும். நண்பர்கள் உதவியுடன் எந்த ஒரு முக்கிய வேலையும் சுலபமாக முடிவடையும். 


மேலும் படிக்க | வார ராசிபலன்: இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? 


மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் கிடைக்கும் பலன்: 
மிதுன ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் விரைவில் நிறைவேறும். வேலை தேடுபவர்கள் நன்மை அடைவார்கள். பணி பாராட்டப்படும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.


கடக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் கிடைக்கும் பலன்:
லட்சுமி நாராயண யோகம் கடக ராசிக்காரர்களின் தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். நிதி ஆதாயம் உண்டாகும். நீங்கள் சொத்தை விற்க விரும்பினால், அது ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனை உண்டாக்கித் தரும். 


கன்னி ராசிக்கு லட்சுமி நாராயண யோகத்தின் பலன்கள்:
செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை ஏற்படுத்தி தரும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை வலுப்பெறும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 


தனுசு ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் எப்படி இருக்கும்: 
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வருமானம் கூடும். திடீரென்று பணம் அல்லது பரிசுகளைப் பெறலாம். உங்கள் பணி பாராட்டப்படும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வேலை மாற வேண்டும் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ