செப்டம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, உஷார்!!

Monthly Horoscope September 2022:செப்டம்பர் மாதத்தின் கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 03:55 PM IST
  • சிம்ம ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை யாரிடமாவது கலந்தாலோசித்த பிறகே எடுக்க வேண்டும்.
  • .துலாம் ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • வியாபாரிகளுக்கு தேவையான முடிவுகள் கிடைக்காது.
செப்டம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, உஷார்!! title=

செப்டம்பர் மாத கிரக நிலை மாற்றங்களும் தாக்கங்களும்: செப்டம்பர் 2022 கிரகப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றும். இது தவிர, புதன் கிரகம் பிற்போக்கு நகர்வை மேற்கொள்ளும். சுக்கிரன் அஸ்தமனமாகும். இந்த கிரகங்களின் இயக்கம் மற்றும் நிலை மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றங்களால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய சில ராசிகள் உள்ளன. செப்டம்பர் மாதத்தின் இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இவர்கள் செப்டம்பர் 2022ல் வருத்தமடையலாம்

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை யாரிடமாவது கலந்தாலோசித்த பிறகே எடுக்க வேண்டும் இல்லையெனில் பிரச்சனைகள் வரலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். முதலீடு செய்யாதீர்கள், நஷ்டம் ஏற்படலாம். அப்படி முதலீடு செய்ய நேரிட்டால், அதை மிகவும் கவனமாக செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு தேவையான முடிவுகள் கிடைக்காது. உங்கள் எண்ணப்படி வெற்றி கிடைக்காது. திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்படலாம். உங்கள் நிதி நிலையை பார்த்து, நன்றாக யோசித்து செலவு செய்யுங்கள். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க | September 2022 Horoscope: கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் சில ராசிகள்! 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். பெரிய முடிவு ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால், நிபுணர்களின் ஆலோசனை பெற்று பின்னரே முடிவெடுக்கவும். தேவையற்ற செலவுகளும் வரலாம். உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

மகரம்: 

செப்டம்பர் மாதத்தில், மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தை பொறுமையாக கழிப்பது நல்லது. தொழிலதிபர்களும் கவனமுடன் யோசித்து, ஆராய்ந்து பின்னரே முதலீடு செய்ய வேண்டும். யோகா-தியானத்தின் உதவியைப் பெற்று, நேர்மறையாக சிந்தித்துக் கொண்டே இருங்கள். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் ஏற்றத் தாழ்வுகளைத் தரும். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், அப்போதுதான் வெற்றி கிடைக்கும். வேலையில் கடினமாக உழைக்கவும். மாணவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிரமங்கள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமையாக பேசுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிம்மத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அதீத நன்மைகள், பண மழை பொழியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News