2023 ஏப்ரல் கிரகப் பரிமாற்றங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் விழுகிறது. மிக முக்கியமான நான்கு கிரகங்கள் ஏப்ரல் மாதத்தில் மாறப்போகின்றன. இந்த 4 கிரகங்கள் ராசியை மாற்றி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
இந்த மாதம் சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சூரியன் பெயர்ச்சி ஆகியவை நடக்கும். இந்த கிரக நிலைகள் ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும் அதே சமயம் சிலருக்கு வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைத் தரும். கிரகங்களின் மாற்றங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2023 சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்: 


ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரலில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் பல நன்மைகளைத் தரும். உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.


மிதுனம்: 


வணிக வகுப்பினருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. வலுவான லாபம் இருக்கும். வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல இது நல்ல நேரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்கள் தைரியம் அதிகமாக இருக்கும்.


கடகம்: 


கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாத கிரகப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள், அது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தொழில் மற்றும் நிதி விஷயங்களுக்கும் இந்த நேரம் நல்லது.


மேலும் படிக்க | April Health Horoscope: ‘இந்த’ ராசிகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்!


கும்பம்: 


கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல வெற்றிகள் வந்து குவியும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வேலைகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும். காலப்போக்கில் சூழ்நிலைகள் சாதகமாக மாறும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும்.


மீனம்: 


மீன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சிகள் மிகுந்த செல்வத்தை தரும். நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். இந்த காலத்தில் எதிர்பார்த்த நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இது உங்கள் இதயத்தை மகிழ்ச்சியடையச் செய்யும். தொழிலும் சிறப்பாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: ஏப்ரல் மாதம் அட்டகாசமாய் பிறக்கும்.. இவர்களுக்கு ஏகபோக லாபம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ