பிப்ரவரி சிம்ம ராசிபலன் 2023: பிப்ரவரி மாதம் கிரக பெயர்ச்சிகள் மற்றும் நிலை மாற்றம் சிம்ம ராசிக்கு சாதகமாக இல்லை என்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சுப பலன்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர்கள் நிறைய சவால்களையும், கஷ்டத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் விரும்பிய பலன்கள் கிடைக்காமல் போகலாம். வேலையில் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதி விவகாரங்களிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக, மாதம் சராசரி வருமானம் கிடைக்கும் என்றாலும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியிடத்தில் சில சவால்கள் இருக்கலாம் . வேலையில் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் குறைவாக இருக்கலாம். வேலையில் நீங்கள் மிகவும் கடினமாக உழைத்தாலும், அங்கீகாரம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படலாம். எனினும் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் நிம்மதியையும் நிவாரணத்தையும் கொடுக்கும்.


மேலும் படிக்க | Weekly Rasipalan (Jan 30- Feb 5): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!


வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் மந்தநிலையை சந்திக்க நேரிடலாம், பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்ளும் அனுபவமிக்க தொழிலதிபரை அணுகுவது நல்லது. வருமானம் மற்றும் செலவுகளில் சம நிலை இல்லாமல், நிதி நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களாலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நண்பர்களிடம் கடன் கொடுக்கும்போதும், கடன் வாங்கும்போதும் கவனமாக இருக்கவும். எனினும், மாத இறுதியில், பரம்பரை சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.


மேலும் படிக்க | Astro: 16 ஆண்டுகள் நீடிக்கும் குரு மகாதிசை! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!


நீங்கள் காதல் உறவில் இருந்தால், மாத தொடக்கத்தில் உங்கள் காதலியுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும், உறவை மேம்படுத்தவும் இணக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு மாதத்தின் இரண்டாம் பக்கம் உரவு கை கூடி வர வாய்ப்பு இருக்கும்.


குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, மாதத்தின் முதல் பகுதி ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் வரலாம். நீங்கள் அமைதியாக இருந்து பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பது நல்லது. 15ஆம் தேதிக்குப் பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அஜீரணம், கால் வலி, தூக்கமின்மை, கண் தொற்று போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினமும் யோகா, உடற்பயிற்சி, தியானம் செய்வது நல்லது. பிப்ரவரி 15க்குப் பிறகு நிலைமை சீராகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அஸ்மனமாகும் சனி இந்த ராசிகளுக்கு புது விடியலை தரும்: பணக்கார யோகம் உருவாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ