அஸ்தமனமாகும் சனி இந்த ராசிகளுக்கு புது விடியலை தரும்: பணக்கார யோகம் உருவாகும்

Shani Ast: 4 ராசிக்காரர்களுக்கு, சனி அஸ்தமன நிலையால் அபரிமிதமான நல்ல பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2023, 04:59 PM IST
  • மீன ராசிக்காரர்கள் சனியின் அஸ்தமனத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
  • செயல்களில் வெற்றி உண்டாகும்.
  • இதுவரை நடக்காமல் முடங்கி இருந்த பணிகள் தொடங்கும்.
அஸ்தமனமாகும் சனி இந்த ராசிகளுக்கு புது விடியலை தரும்: பணக்கார யோகம் உருவாகும்

சனி பகவானின் அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியையும் இயக்கத்தையும் மாற்றுகின்றன. மேலும், ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போது, ​​அது மறைந்து அஸ்தமன நிலைக்கு செல்கிறது. ஜனவரி 17-ம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். கும்பத்தில் நுழைந்த சனி, தற்போது ஜனவரி 30 ஆம் தேதி அஸ்தமனமாகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவானின் நிலை மாற்றமும் அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு, சனி அஸ்தமன நிலையால் அபரிமிதமான நல்ல பலன்கள் ஏற்படும். பிப்ரவரி 5 ஆம் தேதி சனி பகவான் மீண்டும் உதயமாவார். 

சனி அஸ்தமனம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் பெயர்ச்சி மற்றும் அதன் பிறகு சனியின் அஸ்தமனம் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் நல்ல பலன்களை அள்ளித்தரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது திரும்பக்கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் இப்போது கடனை திரும்பக்கொடுப்பார்கள். நீங்கள் வாங்கியிருந்த கடனில் இருந்தும் விடுதலை பெறலாம். 

எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள் 

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் தங்கள் பேச்சாற்றலால் பலன் அடைவார்கள். தங்கள் பேச்சாற்றலாலாலேயே பல பணிகளை முடித்துக்கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மீனம்: 

மீன ராசிக்காரர்கள் சனியின் அஸ்தமனத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். இதுவரை நடக்காமல் முடங்கி இருந்த பணிகள் தொடங்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜனவரி 27 இன்றைய ராசிபலன்: இந்த ராசிகள் பழைய நோய்களை அலட்சியப்படுத்த வேண்டாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News