Rahu Ketu Peyarchi 2023: ஜோதிடத்தில், ராகு-கேது அதிக கோபம் கொண்ட கிரகங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எப்போதும் இயல்பான நிலைக்கு எதிர் திசையில், அதாவது வக்ர நிலையில் பயணம் செய்யும். இந்த வக்ர நிலை காரணமாக, இவை ஒரு ராசியிலிருந்து மற்ற ராசிக்கு மாற ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ராகு கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாற்றத்தால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் மேம்படும், பலரின் தலைவிதி இருண்டுவிடும். இந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதி இந்த இரண்டு உக்கிர கிரகங்களும் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட 4 ராசிகளில் சில பாதகமான விளைவுகள் ஏற்படவுள்ளன. 4 ராசிக்காரர்களுக்கு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகிறது. அந்த ராசிக்களைப் பற்றியும், அந்த ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய நிவாரணங்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 


கன்னி 


ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் தொல்லை தரும். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் தொழில்-வியாபாரத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். அவர்களது வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையின் பல அம்சங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


மீனம்


மீன ராசியில் ராகு-கேதுவின் பிரவேசம் மீன ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் அதிகரித்து வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வெளியாட்களிடம் இருந்தும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியமும் கெடலாம்.


ரிஷபம்


ஜோதிடர்களின் கூற்றுப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். அவர்களின் வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக வீட்டின் நிதிநிலை மோசமடையக்கூடும். முன்பு நினைத்துப்பார்க்காத பல செலவுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகள் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Saraswati Puja 2023: வசந்த பஞ்சமி சிறப்புகள் என்ன? சரஸ்வதி பூஜை செய்ய காரணம் என்ன? 


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். ராகு-கேதுவின் சஞ்சாரத்தால், வாழ்க்கையில் நிதி நெருக்கடி மற்றும் டென்ஷன் அதிகரிக்கும். வேறு பல வகையான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். இது தவிர நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டிய காலம் இது. கோவத்தை தவிர்ப்பது நல்லது. 


நிவாரணங்கள் 


- பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும், தேவையில்லாமல் யார் மீதும் கோபப்பட வேண்டாம். 


- தேவையற்ற செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 


- விடுமுறையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள், வாழ்க்கை துணைக்கு நேரம் கொடுங்கள். 


- நிதிப் பிரச்னை ஏற்படும்போது, ​​புரிந்துணர்வுடன் தீர்வு காணுங்கள். 


- மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள், இல்லையெனில் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு சுக்கிர திசை தான்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ