Solar Eclipse 2024: சோமாவதி அமாவாசை  தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.  பொதுவாக, சூரிய கிரகணம் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை, கிரகணத்தின் போது, ​​சூரியன் ராகுவால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் பாதிப்பை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை காணலாம். சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும்,  சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சூரிய கிரகணம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்


மிதுனம்: சூரிய கிரகணத்தின் தாக்கம் 


மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் சுமாரான பலனைத் தரப் போகிறது. பண பரிவர்த்தனை முதல் வாகனம் ஓட்டுவது வரை  அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆராய்ந்து பார்த்து செலவழிக்க வேண்டும், இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படல்லாம். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். சூரிய கிரகணத்தின் தாக்கம் காரணமாக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பதிக்கலாம், இதன் காரணமாக உடல் நலனில் பிரச்சினைகள் ஏற்படலாம். 


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், மே 1 முதல் பொற்காலம் ஆரம்பம்


கடகம்: சூரிய கிரகணத்தின் தாக்கம் 


சோமாவதி அமாவாசை நாளில் ஏற்படும் சூரிய கிரகணத்தின் தாக்கம் கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் கொடுக்கும். சில சமயங்களில் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லலாம் . நீங்கள் எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாற்றமடையலாம்.  மனதை தளர விடாதீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இல்லையெனில் காரணமின்றி சச்சரவுகள் ஏற்பட்டு பணியிடத்தில் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். வணிகத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லை என்ரால் நிதி சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடும்.


விருச்சிகம்: சூரிய கிரகணத்தின் தாக்கம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் காரணமாக மன அழுத்தம் உடல் நல பாதிப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம், இதனால் நீங்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். அலுவலக பனியில் இருப்பவர்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால்,  அதற்கு சரியான நேரம் இதுவல்ல. இது தவிர, உங்கள் வேலையில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போகலாம். இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


கும்பம்: சூரிய கிரகணத்தின் தாக்கம்


சூரிய கிரகணம் கும்ப ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த நேரத்தில், உங்கள்  உடல் நலன் மீது முழுமையாக கவனம் செலுத்துங்கள். மேலும், கிரகணத்தின் தாக்கத்தால், உங்கள் வேலையில் சிக்கல்கள் ஏற்படும். வேலை பளுவும் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில், சிறந்த வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு லாபம் சராசரியை விட குறைவாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளைத் தவிப்பது நல்லது. இல்லையெனில் பண விரயம் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு சொத்தை வாங்க நினைத்தால், அதன் சட்ட அம்சங்களைப் பற்றி தீவிரமாக முதலில் ஆராயுங்கள். இல்லை என்றால் வருங்காலத்தில் சிக்கல் ஏற்படலாம்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | ஆஞ்சநேயருக்கு பிடித்த ராசிகள்: இவர்களின் துயரங்களை நிமிடத்தில் போக்கி அருள் மழை பொழிவார் அனுமன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ