தற்போது தேர்வுகளின் காலம் தொடங்கி விடும். வரிசையாக பொது தேர்வுகள், நுழைவு தேர்வுகள் என தேர்வு பதற்றத்தில் அனைத்து மாணவர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மன அழுத்தத்தில், சில மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம். சில விஷயங்களை செயல்படுத்துவதன் மூலம், பாடங்களை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்வதோடு, தேர்வுகளில் வெற்றியும் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்வுகளால் ஏற்படும் மன அழுத்தம்


ஒவ்வொரு மாணவரும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று  தான் ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை நிறைவேற்ற, நோக்கத்தை அடையவும் மாணவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. பொது தேர்வுகள் அறிவிக்கப்பட்ட உடம் பலருக்கு மனதில் பதற்றம் வர ஆரம்பிக்கும். எல்லோரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்க ஆரம்பிப்பார்கள். அது CBSE, ICSE, மாநில கல்வி வாரியம் அல்லது வேறு எந்த கல்வி வாரியமாக இருந்தாலும் அல்லது உயர்கல்வியின் எந்தத் துறையாக இருந்தாலும், தேர்வுகள், நுழைவு தேர்வுகள் என இனி வரிசையாக தொடங்கிவிட்டது. 


தேர்வு என்ற பதற்றத்தில் அனைத்து மாணவர்களும் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில்,  அழுத்தத்தில் பாடங்களை நினைவில் கொள்ள முடியாமல் போகலாம். இன்றைக்கு எத்தனையோ அத்தியாயங்களைப் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு உட்கார்ந்து படித்தாலும், ஆர்வமின்மையால், புத்தகத்தைத் திறந்து பார்த்தவுடன் உட்கார மனமில்லாமல், பாடத்தில் நாட்டமில்லாமல் போகலாம்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் அல்லது உங்கள் வீட்டில் ஒரு மாணவர் இருந்தால், இந்த சில குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வில் வெற்றி பெற உதவும்.


படிப்பதற்காக அமரும் திசை


மாணவர்கள் படிக்கும் போது தங்கள் முகத்தை எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மேலும் இந்த ஆற்றலுடன் மனம் படிப்பில் ஈடுபட தொடங்குகிறது. படிப்பதற்கு முன், வடக்கு திசையை நோக்கி ஐந்து நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.


படிக்கும் இடம்


படிக்கும் போது, ​​நேரடியாக காற்று வரும் ஜன்னல் அல்லது கதவுக்கு முன்னால் உட்கார வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கதவு மற்றும் ஜன்னலில் இருந்து வரும் நேரடி காற்றின் வேகம் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும். உங்கள் மனம் படிப்பிலிருந்து விலகி அலையும்.


படிக்கும் நேரம்


தற்போது குழந்தைகள் பெரும்பாலும் இரவில் படிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதைச் செய்வதன் மூலம் உங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டு, நினைவு திறன் குறைவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பிரம்ம முஹூர்த்த நேரம் படிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. மனது புத்துணர்ச்சியுடன் இருப்பதால், இந்த நேரத்தில் எழுந்த பிறகு செய்யப்படும் பணிகள், நீண்ட நேரம் மனதில் இருக்கும். ஏனென்றால் மூளையின் நினைவக அமைப்பு காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ