இன்று முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் வலுவான லாபம் கிடைக்கும்
Budhan Peyarchi 2022: இன்றுஅதாவது ஆகஸ்ட் 21, 2022, புதன் கிரகம் ஞாயிற்றுக்கிழமை கன்னி ராசிக்குள் நுழைகிறது. இந்த புதன் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் பெரும் பலன்களை கொண்டு தரும்.
புதன் பெயர்ச்சி 2022: புத்திசாலித்தனம், தர்க்கம், வியாபாரம், செல்வம் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் கருதப்பாடுகிறார். அதேபோல் புதன் ராசியை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. இன்று, ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் 1:55 மணிக்கு, புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைகிறார். அதன் பின்னர் செப்டம்பர் 10ம் தேதி புதன் தன் சொந்த ராசியிலேயே வக்ர நிலை அடைகிறார். அதாவது பின்னோக்கி நகர உள்ளார். அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார். அக்டோபர் 26ம் தேதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கன்னி ராசியின் அதிபதியான புதன், அவரின் சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமைய உள்ளார். எனவே புதனின் நிலை மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலை-வியாபாரத்தில் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். அவை எந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
புதன் சஞ்சாரம் 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும்
ரிஷபம்- கன்னி ராசியில் புதன் நுழைவது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். அவர்களின் பணியில் மாற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக காத்திருந்த தொழிலில் மாற்றம் ஏற்படும், அதேபோல் உங்களின் அனைத்து ஆசைகள் நிறைவேறும். பொருளாதார பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முதலீடு செய்து லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். பரம்பரை வியாபார சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!
மிதுனம்- இந்த புதன் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். வீடு வாங்குவதற்கும் கட்டுவதற்கும் ஏற்ற காலம் இது. புதிய கார் வாங்கலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சிக்கிய பணத்தை திரம்பப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிக்காரமாக இருக்கும்.
சிம்மம்- புதனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் தரும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு இதுவே ஏற்ற காலம். அரசு வேலை பெற விரும்புபவர்கள் தீவிரமாக தயாராக வேண்டும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
கன்னி- புதன் ராசியை மாற்றி கன்னி ராசியில் நுழைவதால் இந்த ராசியில் புதன் சஞ்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவர்களின் தொழில் வாழ்க்கைக்கு அடுத்த 2 மாதங்கள் மங்களகரமானதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தனியாக இருப்பவர்கள் துணையை பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ