ஆடி முதல் வெள்ளி இந்த 5 ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும்
ஆடி மாதம் அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகும். இம்மாதத்தில் அம்மானை வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில் சில ராசிக்காரர்கள் விரும்பிய பலனை பெறுவார்கள்.
இன்று ஆடி வெள்ளி. அதன்படி சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ராசிக்காரர்களுக்கு அம்மனின் ஆடி வெள்ளி சிறப்பு வாய்ந்தது. ஜோதிட சாஸ்திரங்களின்படி, தமிழில் ஆடி மாதம் என்பது, கடக ராசியில் சூரியனின் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் ஆகும். ஆடி மாதம் அம்மனுக்கு மிகுந்த விசேஷமான பூஜைகள் செய்யப்படுவது உண்டு. ஆடி மாதத்தில் இறைவழிபாடுகளை மேற்கொள்வது என்பது குடும்பத்திற்கும் நன்மைகளை வாரி வழங்கும் செயலாகும். அந்த வகையில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை அன்று, குலதெய்வ வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆனால், குலதெய்வம் கோவில் வேறு ஊரில் இருக்கிறது, நினைத்தவுடன் சென்று வர முடியாது, அல்லது சமீபத்தில் தான் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டீர்கள் என்றால், வீட்டிலேயே ஆடி முதல் வெள்ளி அன்று வழிபடலாம். அதன்படி இன்று ஆடி மாததீன் முதல் வெள்ளிக்கிழமை இந்த ராசிக்காரர்களுக்க சிறப்பாக இருக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
தற்போது சனி பகவான் மகர ராசியில் பிற்போக்கு நிலையில் அமர்ந்துள்ளார். மகரம், கும்பம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சரித்திருப்பதால் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. அதேசமயம் மிதுனம் மற்றும் துலாம் ராசியில் சனி தசையின் தாக்கம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு ஆடி முதல் வெள்ளி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார்
ரிஷபம்
உங்களின் துறையில் வெற்றி பெறுவீர்கள்.
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.
மிதுனம்
பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.
இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும்.
பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும்.
கன்னி
பணமும் லாபமும் இருக்கும், இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும்.
மரியாதை, பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சுமுகமாக இருக்கும்.
உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.
துலாம்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும்.
அரசு வேலையை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல நேரம்.
இந்த நேரத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மீனம்
இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல நேரம்.
கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ