2023-ல் இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி: வெற்றிகள் குவியும், செல்வம் பெருகும்
Ezharai Nattu Sani: சனிபகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். சனியின் இந்த பெயர்ச்சி பல வகைகளில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒன்பது கிரகங்களில் சனி பகவானுக்கு சிறப்பு இடம் உண்டு. சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனென்றால் சனி மக்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனீஸ்வரன் கலியுகத்தின் நீதிபதியாக கருதப்படுகிறார். மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியான சனி அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார்.
3 தசாப்தங்களுக்குப் பிறகு, சனி, 17 ஜனவரி 2023 அன்று தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் நுழையப் போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றத்தால் பலருக்கு பல வித நிவாரணங்கள் கிடைக்கவுள்ளன. சனிபகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். சனியின் இந்த பெயர்ச்சி பல வகைகளில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி 17, 2023 அன்று இரவு 8:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.
சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ராசியில் நுழைகிறார்
ஜனவரி 17, 2023 அன்று, சனி மீண்டும் கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றத்தால் மீன ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். மறுபுறம், மகரம் மற்றும் கும்பத்தில் ஏழரை நாட்டு சனி தொடரும். ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மீன ராசியிலும், இரண்டாம் கட்டம் கும்பத்திலும், கடைசி கட்டம் மகர ராசியிலும் இருக்கும். 2023 ஆம் ஆண்டில், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை தொடங்கும்.
இவர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
2023 ஜனவரியில் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கும்போது, மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். ஆனால் சனியின் சொந்த ராசியான கும்ப ராசிக்காரர்கள் முக்தி பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
சனியின் தோஷங்களில் இருந்து விடுபட பரிகாரம்
- சனியின் தோஷம் நீங்க, சனிக்கிழமை தோறும் அரச மரத்தடியில் தீபம் ஏற்றவும்.
- சனி உங்களை சரியான பாதையில் செல்ல ஊக்குவிக்கும் கிரகம். ஆகையால், மக்கள் சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் இறைச்சி அல்லது முட்டை உட்கொள்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
- பணியாளர்கள் / வேலையாட்கள் அல்லது தேவையில் உள்ளவர்களுக்கு உணவு, உடை மற்றும் காலணிகள் வழங்குவது நன்மை பயக்கும்.
- இந்த ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்:
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமக்ரஜம்.
ச்சாயாமர்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம்
மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சனியினால் ‘3’ ராசிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ