ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் சனி ஜாதகத்தில் அசுபமான நிலையில் இருந்தால், அது நிறைய தொல்லைகளைத் தருகிறது மற்றும் அதன் பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும். 2023, ஜனவரி 17ம் தேதி அன்று சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறது. சனியின் ராசி மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு பல தொல்லைகள் உண்டாகும். சனியின் பாதிப்பினால் பூர்வீக செல்வம், குடும்பம், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் சிக்கலை ஏற்படலாம். 2023-ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி தொல்லைகளைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2023ல் சனி இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகளை தருவார்
மேஷம்: 2023ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு பண நெருக்கடியை ஏற்படுத்தும். அவர்களின் செலவுகள் அதிகரிக்கும். வைப்பு மூலதனமும் கரையும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பதற்றம் ஏற்படலாம். பொதுவாக மனநிலை மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம். தேவையற்ற பயணங்கள் ஏற்படும். எனினும், சோர்வடைய வேண்டாம், கவனமாக வேலை செய்யுங்கள். பரிகாரம் - தினமும் சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து, உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் புதன்; புத்தாண்டில் வெற்றிகளை குவிக்க உள்ள ‘சில’ ராசிகள்!
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களும் 2023ல் சனியின் பெயர்ச்சியினால் சிரமப்படுவார்கள். இதன் காரணமாக, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நீங்கள் குழப்பமடைவீர்கள். உடல்நலம் பாதிக்கப்படும். வேலை அழுத்தம் ஆதிக்கம் செலுத்தும். குடும்ப உறுப்பினர்களால் மன வேதனை அடையலாம். சொத்து போன்றவற்றில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது நல்லது. இல்லையெனில், தேவையற்ற செலவுகள் உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனினும் ரிஸ்க் அதிக உள்ள துறையில் அல்லது நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்யாதீர்கள். பரிகாரம் - சனிக்கிழமைதோறும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு: 2023-ல் சனிபகவான் பெயர்ச்சி ஆவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறிதலவில் பாதிப்பு இருக்கும். சனியின் ஏழரை நாட்டு சனி பாதிப்பு முடிந்த பிறகும் இந்த பெயர்ச்சி காலம் சற்று வேதனையாக இருக்கலாம். தொழிலில் தடைகள் வரலாம். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ரிஸ்க்கான இடங்களில் முதலீடுகளைச் செய்யாதீர்கள். இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். நிலம், வாகனம் ஆகியவற்றில் மட்டும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். பரிகாரம் - தினமும் சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | விருச்சிக ராசியில் புத - ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ