சனி வக்ர பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படும் தாக்கம்: சனி பகவான் 5 ஜூன் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது. ஆனால், சனி பகவான் அனைவருக்கும் கஷ்டத்தை கொடுக்கவுள்ளார் என்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரது ஜாதகத்தில் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால், அது ஒருவரை உச்சிக்கு கொண்டுசென்றுவிடும். அதேபோல், சனியின் பிற்போக்கு நகர்வு பல ராசிகளுக்கு நன்மை பயக்கும். சனியின் பிற்போக்கு நகர்வு எந்த ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 


மேஷம்:
சனியின் பிற்போக்கு இயக்கம் மேஷ ராசியினருக்கு நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஜூன் 5 முதல் அக்டோபர் 23 வரை சனி பகவான் இந்த நிலையில் இருப்பார். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எண்ணி இருந்த பல ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.


மேலும் படிக்க | 2 நாட்களில் 2 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை


கடகம்:


கடக ராசிக்காரர்களுக்கு சனியின் தலைகீழ் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.


சிம்மம்:
சிம்ம ராசிக்கு சனியின் பிற்போக்கு நகர்வின் பலன் கலவையாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். ஆனால் கடின உழைப்பால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தடைபட்ட வேலைகள் இந்த காலத்தில் நடந்துமுடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். 


மகரம்:


மகரம் ராசிக்காரர்கள் பிற்போக்கான சனி காலத்தில் சுக பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். பண வரவுகள் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


கணவன் / மனைவி, குழந்தை இவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 


மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நகர்வு காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.


குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் இந்த காலத்தில் பல நல்ல செய்திகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த ஒரு நண்பரிட்ம மீண்டும் நட்பு மலரும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe