மேஷ 2023 ராசியில் குரு சந்திரன் சேர்க்கை: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சேர்க்கை சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகங்களில் கஜகேசரி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் கஜகேசரி ராஜயோகம் உள்ளவர் உயர் பதவியும், அபரிமிதமான செல்வமும், மரியாதையும் பெறுகிறார். இதே ராசியில் குருவும் சந்திரனும் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவானது. தற்சமயம் தேவகுரு பிருஹஸ்பதி மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்தார். மறுபுறம் இன்று மே 17, 2023 புதன்கிழமை, சந்திரன் பெயர்ச்சி மேஷ ராசியில் அடைந்தார். இதனால் மேஷ ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவானது. இதனால் குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம், மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த பலன் அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படித்தான் கஜகேசரி யோகம் உருவாகிறது
எந்த ராசியில் குருவும் சந்திரனும் சேர்க்கை நடக்கிறதோ அப்போது கஜகேசரி ராஜயோகம் உண்டாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ராசிக்காரர்களுக்கு அதன் பலன் கிடைக்கும். மறுபுறம், குரு சந்திரனில் இருந்து மைய வீட்டில் (1, 4, 7 மற்றும் 10 வது வீடு) அமைந்திருக்கும் போது, ஜாதகத்தில் கஜகேசரி உருவாகிறது, மேலும் இது அந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு புகழ், வெற்றி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கும். மேலும் கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சூப்பர்.. சிலருக்கு ரொம்ப சுமார், முழு ராசிபலன் இதோ


கஜகேசரி யோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்


மேஷ ராசி: மேஷ ராசியில் குரு சந்திரன் சேர்க்கை இந்த ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவானது. மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அபரிமிதமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பையும் வளத்தையும் பெறுவார்கள். நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும். பணம் பெற புதிய வழிகள் அமையும். உங்கள் பணி பாராட்டப்படும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். வியாபாரம் நன்றாக நடக்கும்.


மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் மரியாதையும், புகழும் பெறுவார்கள். உயர் பதவி பெறலாம். நீங்கள் புதிய வேலை அல்லது பதவி உயர்வு பெறலாம். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் பெரிய பலன்களை தரும். எங்கிருந்தாவது திடீரென்று பண வரவு ஏற்படும்.


துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் வெற்றியையும் செல்வத்தையும் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். நீங்கள் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் முன்னேறுவீர்கள். திடீரென்று எங்கிருந்தோ பண வரவு ஏற்படும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். எங்காவது சுற்றுலா செல்லலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 22 நாட்களில் நடக்கப்போகும் அபூர்வ பெயர்ச்சி..! 5 ராசிகளுக்கு பம்பர் லாட்டரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ