துலாம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இதனுடன், கிரகங்களின் பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளால் அவ்வப்போது பல ராஜயோகங்களும் உருவாகின்றன. இவை அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு கிரகங்களின் சேர்க்கை நடக்கவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வத்தையும் ஆடம்பரத்தையும் அளிப்பவரான சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் செவ்வாயும் புதனும் இணைந்திருப்பது மிகவும் சுபமான பலனைத் தரும். செவ்வாய் கிரகம் முருகர் மற்றும் ஆஞ்சனேயருடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் மங்கள் கிரகரம், அதாவது சுபமான கிரகமாக கருதப்படுகின்றது. 2023 அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்களுக்கு திடீரென நல்ல பண வரவு இருக்கும். வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 


இந்த ராசிகளுக்கு செவ்வாய்-புதன் சேர்க்கை அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும்


மேஷ ராசி: 


செவ்வாய்-புதன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்கள் ஆற்ற; அதிகரிக்கும். ஒன்றன்பின் ஒன்றாக பல வெற்றிகள் இப்போது உங்களுக்கு கிடைக்கும்.  உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாக முடிவு வரலாம்.


மேலும் படிக்க | அள்ளி கொடுக்கும் குரு.. இந்த ராசிகளின் காட்டில் பணமழை கொட்டும்


மிதுன ராசி: 


செவ்வாய் மற்றும் புதனின் சேர்க்கை மிதுன ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள், முன்னேற்றம் ஏற்படும். வருமானம் கூடும். திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எழுத்து மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடையவர்களுக்கு இது ஒரு அற்புதமான நேரமாக இருக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். இந்த நேரத்தில் தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். லாபகரமான மற்றும் சாதகமான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட வேண்டியவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


தனுசு ராசி: 


செவ்வாய்-புதன் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் பணத்தின் அடிப்படையில் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். வருமான உயர்வால் பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். முதலீட்டில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பழைய முதலீடும் லாபம் தரும். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவு காணப்படும். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தையில் கட்டுப்பாடு மிக அவசியமாகும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெற்றி, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் நவம்பர் 4 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ