Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்
Makar Sankranti Rasipalan 2023: மகர சங்கராந்தியான இன்று இரவும் சூரிய பெயர்ச்சி நடைபெறுகிறது... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்? தெரிந்துக் கொள்வோம்
பொங்கல் ராசிபலன்: மகர சங்கராந்தி நாளான இன்று, சூரியன் தற்போது இருக்கும் ராசியில் இருந்து விலகி, மகர ராசியில் நுழைவார். ஜனவரி 14, சனிக்கிழமை நாளான இன்று இரவு மகர ராசிக்குள் நுழையும் சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை தமிழரின் பாரம்பரிய பண்டிகை ஆகும். ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை காலம்காலமாக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சூரியன் தனது ராசியை மாற்றும் இந்த நிகழ்வே, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. சூரியப் பெயர்ச்சியின் தாக்கமானது, அனைத்து ராசிக்காரர்களுக்கும் மாறுபட்ட பலன்களைத் தரும்.. சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். மகர சங்கராந்தியன்று மாறும் சூரியனின் ராசிப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும் மகர சங்கராந்தி நாள் இது. உங்களுக்கு பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு உகந்த நேரம் இது. பணம், பதவி, பட்டம், கெளரவம் தேடி வரும் காலம் இது. சமூகத்தில் அந்தஸ்து உயரும். ஆடமபரமான பொருட்களை வாங்கி மகிழலாம். சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புகள் இந்த மாதத்தில் ஏற்படும்.
மேலும் படிக்க | கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும். காதலுக்காகவும், அன்பானவர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், அது சுப செலவாக இருக்கும் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வேலைகள் செய்வதில் சுணக்கம் இருக்கும், ஆனால், மனதை ஒருமைப்படுத்தி பணியாற்றினால், பலன் கைமேல் வந்து சேரும்.
சிம்மம்
சூரியனின் ராசி மாற்றம், சிம்ம ராசியினருக்கு பல வெற்றிகளைப் பெறலாம். தொழில் மற்றும் பணியில் நல்ல பெயர் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும், சமூகத்தில் நன்மதிப்பும் கிடைக்கும்
கடகம்
மகர ராசிக்கு பெயரும் சூரியனின் தாக்கம், உங்கள் லக்னத்தில் இருக்கும். அதன் எதிரொலியாய், பண வரத்து நன்றாக இருக்கும். வேலையிடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அடித்தளத்தை, இந்த காலகட்டம் உங்களுக்கு அமைத்துத் தரும்.
மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ