Budh Uday 2023: புதனின் உதயத்தால் வாழ்க்கையில் சுகத்தையும் மகிழ்ச்சியையும் பெறும் ‘4’ ராசிகள்

Budh Uday January 2023: ஜனவரி 13 ஆம் தேதி, கிரகங்களின் இளவரசரான புதன் பகவான், தனுசு ராசியில் உதயமாகவிருக்கிறார். இந்த புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை ஏற்படுத்தவிருக்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 12, 2023, 11:56 PM IST
  • புதன் உதயத்தால் வேலைவாய்ப்பை பெற்று மகிழவிருக்கும் ராசிகள்
  • நாளை உதயமாகிறார் புதன்
  • பொங்கலுக்கு முன் நடக்கும் புதன் சஞ்சாரம்
Budh Uday 2023: புதனின் உதயத்தால் வாழ்க்கையில் சுகத்தையும் மகிழ்ச்சியையும் பெறும் ‘4’ ராசிகள் title=

Planets Transit: புத்தாண்டு தொடங்கியதுமே, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சங்கராந்தி, பொங்கல், ஜல்லிக்கட்டு என்று பல மாற்றங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், நாளை அதிகாலை புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இதைத் தவிர, முக்கியமான கிரகங்கள் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகப் போகின்றன. ஜனவரி 13 ஆம் தேதியாகிய நாளை, கிரகங்களின் இளவரசரான புதன் பகவான், தனுசு ராசியில் உதயமாகவிருக்கிறார். இந்த புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை ஏற்படுத்தவிருக்கிறது.

நாளை உதயமாகும் புதன் யாருக்கு நல்லது செய்வார் என்று தெரிந்துக் கொள்வோம். புதனின் உதயத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி உதயமாகும் நான்கு ராசிக்காரர்கள் இவர்கள்...

மிதுனம்

தனுசு ராசியில் புதன் உதயமாவது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரத்தைக் கொண்டு வருகிறது இந்த புதன் உதயம். மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் அந்தஸ்து உயரும்.

திருமண வாய்ப்புகள் உருவாகும். இந்த நேரத்தில் தாயுடனான உறவு மேம்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர் கிடைப்பார்கள். தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் நிம்மதியைத் தரும். பணியிடத்தில் அழுத்தம் குறையும் சந்தர்ப்பம் ஏற்படவிருக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும் புதனின் உதயம், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேற வாய்ப்புள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கவும், சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நன்மை பயக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை மேம்படும்.

துலாம்

இந்த ராசிக்காரர்களுக்கும் புதனின் உதயம் சிறப்பாக அமையப் போகிறது. இதன் போது திடீரென பணம் வந்து சேரும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் நன்மைகளைப் பெறுவார்கள். அதே நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

புதனின் உதயத்தால், புதிய வீடு, பிளாட் அல்லது புதிய கார் வாங்கும் வாய்ப்பை உருவாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், பிள்ளைகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

மேலும் படிக்க | சுக்கிரனின் சஞ்சாரத்தால் ‘சம்சார சுகம்’ பெறும் 3 ராசிகள்! திருமணத் தடை நீங்கும்

விருச்சிகம்

புதனின் உதயத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு புகழும் புகழும் உயரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் பேச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். தொழிலதிபர்கள் வேலையை அதிகரிக்க எண்ணி, அதில் வெற்றியும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிர பெயர்ச்சி 2023: மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் குளிக்கப்போகும் 4 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News