சனிப் பரிகாரங்கள் 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதியின் கடவுளான சனியின் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் சனியின் வக்ர இயக்கம் அசுபமாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஜூன் 17 ஆம் தேதி, 2023 அன்று, சனி அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் மாறியது. சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் சனி நவம்பர் 4, 2023 வரை இதே நிலையில் தான் இருக்கும், அதுவரை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய குழப்பங்கள் ஏற்படலாம். எனவே வரும் நவம்பர் 4 ஆம் தேதி, 2023 வரை சிலரை இந்த சனி தொந்தரவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வக்ர சனியின் அசுப பலன்கள் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும்


சிம்மம்: சனியின் வக்ர நிலை சிம்ம ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் பிரச்சினைகள் இருக்கலாம். நிதி இழப்பு ஏற்படக் கூடலாம். நீங்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவீர்கள். ஒரு புதிய வேலையைத் தொடங்குவதில் தவறு செய்யாதீர்கள், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்!


விருச்சிகம்: சனியின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனைகளை தரலாம். அதேபோல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செலவு அதிகமாகக்கூடும். உத்தியோகத்திலும் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். கூட்டாளருடனான உறவும் மோசமடையலாம்.


மீனம்: சனியின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தும். வருமானம் சாதாரணமாக இருந்தாலும் சரி அல்லது நன்றாக இருந்தாலும் சரி, தேவையற்ற செலவுகள் மீன ராசிக்காரர்களுக்கு தொந்தரவு செய்யும். மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். துணையுடன் சண்டை வரலாம். கவனமாக இருக்கவும்.


சனியின் கோபத்திற்கு இந்த பரிகாரங்களை செய்யவும்


* சனிக்கிழமையன்று தானம் செய்வது சனி தோஷத்தைத் தவிர்க்கும் உறுதியான வழி. இதற்கு ஒரு வெண்கலப் பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து அதில் உங்கள் முகத்தைப் பார்க்கவும். பின்னர் சனி கோவிலில் கிண்ணத்துடன் எண்ணெய் வைக்கவும். இதனுடன் சனிபகவானுக்கு நிவாரணம் அளிக்க பிரார்த்தனை செய்யுங்கள். வெண்கலக் கிண்ணம் இல்லையென்றால் மண் பானையில் கடுகு எண்ணெயை எடுத்து வைத்தும் இப்படி நிழலை தானம் செய்யலாம்.


* சனிக்கிழமையன்று கருப்பு எள், உளுந்து, எண்ணெய் தானம் செய்வதும் பல நன்மைகளைத் தரும்.


* சனியின் ஆசியைப் பெற, டதுரை வேரை அணிவதும் பல நன்மைகளைத் தரும். டதுரா வேரை தாயத்து போன்ற நீல நிற துணியில் கட்டி கழுத்து அல்லது கையில் அணியவும். இதன் மூலம் சனி பகவான் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பார்.


* ஏழு முக ருத்ராட்சத்தை திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் அணிவதும் சனியின் தொல்லைகள் நீங்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சிம்மத்தில் செவ்வாய் சஞ்சாரத்தின் தீய பலன்கள் யாருக்கு? ‘அந்த’ 4 ராசியில் உங்கள் ராசியும் உள்ளதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ