குரு வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தில், வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. குரு பகவானான வியாழன் கிரகம் அறிவு, வருமானம், நிர்வாகம் போன்றவற்றுடன் தொடர்புடையது. வியாழன் அசுபமாக இருக்கும் போது பண இழப்பு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் உண்டாகும். தற்போது, ​​வியாழன் பிற்போக்கு நிலையில், அதாவது வக்ர நிலையில் உள்ளார். அவர் 29 ஜூலை 2022 அன்று மீனத்தில் வக்ர பெயர்ச்சி செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழன் சுமார் 4 மாதங்களுக்கு அதாவது 24 நவம்பர் 2022 வரை பிற்போக்கு நிலையில் இருப்பார். செல்வம் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு நிலை அவ்வளவு நல்லதாக கருதப்படவில்லை. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம்:


வியாழனின் வக்ர பெயர்ச்சி காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பெயர்ச்சியின் போது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனுடன் திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். உறவினர்களுடன் சங்கடங்கள் ஏற்படலாம். அனைத்து இடங்களிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நிவாரணம் அளிக்கும்.


மேலும் படிக்க | சதுர்கிரகி யோகம்: இன்னும் சில நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், செல்வம் கொழிக்கும் 


கடகம்:


குரு பகவானின் பிற்போக்கு நிலை, கடக ராசிக்காரர்களின் பணிகளை தாமதப்படுத்தலாம். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம். பணியிடத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். எனினும், உங்கள் புத்திசாலித்தனத்தால், இவற்றை சரி செய்வீர்கள். உறவினர்களுக்கு இடையில் மன சஞ்சலம் ஏற்படலாம். அனைத்து இடங்களிலும் அமைதியாக இருங்கள். வீண் விவாதம் செய்ய வேண்டாம்.


வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள். முக்கியமான வேலையைச் செய்வதற்கு முன், மூத்தவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.


துலாம்:


துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் சிறப்பு கவனம் தேவை. அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது. அனைவரிடமும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள். யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம்.


வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று விஷ்ணுவை வழிபடவும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு உதவுங்கள்.


மீனம்:


மீனத்தில் வியாழனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். மீன ராசியின் அதிபதியும் வியாழன்தான். மீன ராசிக்காரர்கள் சோம்பலை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீங்கள் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். வருமானத்தைப் பெருக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். பணியிடத்திலும் பல சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம்.


வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று விரதம் இருந்தால் பலன் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் தகராறு செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பாசமாக நடந்துகொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடுத்த 140 நாட்கள் பொற்காலமாக இருக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ