மேஷ ராசியில் இணையும் சந்திரன் - ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

Conjunction of Moon and Rahu: சந்திரன் மற்றும் ராகு இணைவதன் காரணமாக கிரகண யோகம் காரணமாக, சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2022, 04:00 PM IST
  • சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை கலவையான பலன்களைத் தரப்போகிறது.
  • வதந்திகளிலிருந்து விலகி இருங்கள்.
  • உங்களது சிரிப்பு கூட எதிரில் இருப்பவரை புண்படுத்தும்.
மேஷ ராசியில் இணையும் சந்திரன் - ராகு; சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்! title=

சந்திரன் மற்றும் ராகு இணைவதன் காரணமாக கிரகண யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஆகஸ்ட் 16 அன்று 09:06 நிமிடங்கள் முதல் 19 ஆகஸ்ட் 06:07 வரை நீடிக்கும். இந்த இரு கிரகங்களும் மேஷ ராசியில் இணைகிறார்கள். சந்திரன் ராகுவின் தாக்கத்தில் இருந்து விடுபட இரண்டரை நாட்கள் ஆகும். ஜாதகத்தில் சந்திரன் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். சந்திரன் ராகுவுடன் இணைந்தவுடன், சந்திரன் சிதைந்து கிரகணத்தின் தாக்கத்திற்கு ஆளாகிறது. இதனால், அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் பலவீனமாகும். இதனால், சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன.

மேஷம் - பணம் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் சிறிது டென்ஷன் இருக்கும். மன அழுத்தம் மற்றும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும். சளி மற்றும் இருமல் தாக்கலாம்.

ரிஷபம் - பயணங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் பேச்சில் விழாதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் சச்சரவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தூக்கமின்மை காரணமாக பலவீனமாக உணரலாம். புதிய தொழிலில் இருந்து விலகி இருக்க வேண்டி வரும். 

மிதுனம் - பண வரவு மகிழ்ச்சியைத் தரும். பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் நேரம் செலவழியுங்கள்

கடகம் - உத்தியோகத்தில் பொறுப்புகளை எச்சரிக்கையுடன் நிறைவேற்ற வேண்டும். சக ஊழியர்களுடனும் உயர் அதிகாரிகளுடனும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலதிகாரியின் அறிவுரையை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான தரவுகளை கைவசம் வைத்திருங்கள், அலட்சியம் காரணமாக நீங்கள் வழக்குகளில் சிக்க கூடும்.

சிம்மம் - இந்த 2 நாட்களும் சிம்ம ராசிக்காரர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. காரணம் செய்யும் காரியங்களில் தடைகள் அதிகமாகும், செய்யும் வேலைகளும் நின்று போகலாம். ஆன்மீக நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்க கூடும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க வேண்டும். தந்தைக்கு சேவை செய்யுங்கள். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்கள்.

மேலும் படிக்க | கிரக பெயர்ச்சி 2022: அடுத்த 4 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்

கன்னி - உடல்நலம் தொடர்பான விஷயங்களில் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்கவும். கடந்த காலம், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மனம் வாட்டலாம். அத்தகைய சூழ்நிலையில், நிகழ்காலத்தை அனுபவிக்க வேண்டும். வயிறு சம்பந்தமான நோய்கள், சளி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். எனவே உணவி விஷயத்தில் கவனம் தேவை. குறிப்பாக அசைவம் மற்றும் போதை பொருட்களை உட்கொள்பவர்கள் இந்த 2 நாட்களில் அதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம் - வியாபாரம் மற்றும் வேலையில்  இருப்பவர்களுக்கு சிறந்த நேரம். மரியாதை பெறுவீர்கள். சமூகதில் புகழ் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன், வணிக கூட்டாளியுடன் உறவு வலுவாக இருக்கும், ஆனால் சிறிய விஷயங்களில் மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கும். இந்த 2 நாட்கள் சில புதிய தொடக்கங்களைத் தொடங்குவதற்கு சாதகமாக இருக்கும், குறிப்பாக வணிகத்தில், லாப எதிர்பார்ப்பு அதிகமாகத் தெரியும்.

மேலும் படிக்க |  ராகுவின் அருளால் செல்வ செழிப்பில் திளைக்கும் ‘2’ ராசிகள் இவை தான்!

விருச்சிகம் - சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை கலவையான பலன்களைத் தரப்போகிறது. வதந்திகளிலிருந்து விலகி இருங்கள். இந்த நேரத்தில் வணிக பயணங்களால் லாபம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வதந்திகள் மற்றும் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடக்கூடாது.

தனுசு - 2 நாட்கள் வணிக விஷயங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலை மற்றும் வாடிக்கையாளர்களிடம் அதிக கவனம் செலுத்தினால், நல்ல லாபம் ஈட்ட முடியும். குழந்தைகளின் வேலை மற்றும் படிப்பில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். வயிறு தொடர்பான நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மகரம் - எந்த விதமான கருத்தையும் கூறுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் கடுகு போன்ற விஷயம் மலை போல உருவாகலாம். அனைவருடனும் இணக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. வேலையில் கடின உழைப்பு அதிகரிக்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு நாட்களும் அவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!
 
கும்பம் - வெளியூர் தொடர்பான வேலைகள் நிறைவேறும், வெளியூர் செல்லவோ அல்லது வெளிநாடு தொடர்பான தொழிலில் முதலீடு செய்யவோ இந்த இரண்டு நாட்கள் உகந்தது. ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு மத பயணத்தையோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வையோ ஏற்பாடு செய்ய விரும்பினால், அதைச் செய்யலாம்.

மீனம் - ராகுவினால்  மீன ராசிக்காரர்களின் பேச்சின் காரணமாக சச்சரவு ஏற்படலாம். உங்களது சிரிப்பு கூட எதிரில் இருப்பவரை புண்படுத்தும். வீட்டு விஷயங்களில் வீண் ஆதங்கத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் வரலாம், பல் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News