June 2023 Horoscope: ஜூன் மாதம் தொடங்க உள்ளது. புதிய மாதம் அனைவருக்கும் நம்பிக்கைகள் நிறைந்ததாக அமைய உள்ளது. கோடை விடுமுறைக்காக அடைக்கப்பட்ட பள்ளிகள் இம்மாதத்தில் மீண்டும் திறக்க உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் புது வகுப்பிற்கும், கல்லூரிக்கும் போக உள்ளதை அடுத்து பல சிந்தனைகளிலும், திட்டங்களிலும் பிஸியாக இருப்பார்கள். இந்த மாதம் சரியாக அமைந்தால், அடுத்த முழு கல்வியாண்டும் நன்றாக அமையும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.


அதே போல் வரவிருக்கும் மாதம் தங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய மற்றவர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த சூழலில், வரும் ஜூன் மாதம் தொழில் ரீதியாக இந்த 6 ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த 6 ராசிகளின் பலன்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். 


மேஷம்


இந்த ராசிக்காரர்கள் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள், ஏனென்றால் உங்கள் பணியின் விவரங்களுடன் உங்கள் முதலாளி எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். எனவே உங்கள் வேலையில் முக்கியமான விஷயங்களை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருந்து ஆன்லைனில் வேலை செய்பவர்கள் மிகுந்த பொறுமையுடன் வேலையை முடிக்க நினைக்க வேண்டும்.


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் பணியிடத்தில் கொஞ்சம் அலட்சியம் காட்டினால், அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலக வேலைகளில் முழுமையைக் கொண்டுவர முயற்சிப்பதன் பலன்களையும் நீங்கள் காண்பீர்கள். உங்களின் சொந்த உழைப்பு சமூகத்தில் தனித்துவத்தை உருவாக்கும். மேலும் உங்கள் வேலையில் வெற்றியும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் ஜூன் 3 வரை கவனம்


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும். சிக்கலான பணிகளுக்கு சிறிது நேரம் காத்திருப்பது நல்லது. முதலாளி கொடுக்கும் பணிகளை முடிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாதத்தின் கடைசி வாரத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


மகரம்


மகர ராசிக்காரர்கள் உத்தியோகப் பணிகளில் சோம்பல் மற்றும் அதீத சிந்தனையில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இல்லையெனில் வாய்ப்புகள் உங்கள் கையை விட்டு நழுவக்கூடும். சுறுசுறுப்பாக இருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை மற்றும் நடத்தையை சரியாக வைத்திருங்கள், ஏனென்றால் முதலாளியின் கனவம் உங்கள் மீது இருக்கும். உங்கள் பணி சிறப்பாக இருக்கலாம், ஆனால் நடத்தை சரியாக இல்லாவிட்டாலும், வேலையில் நெருக்கடி ஏற்படலாம்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் மேலதிகாரியின் வார்த்தைகளை சரியாக கடைபிடிக்காவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இதனுடன், பணியிடத்தில் நிலவும் அரசியலில் இருந்து தன்னை ஒதுக்கி வைக்க வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அவசரப்படாமல் சரியாகச் செய்யுங்கள்.


மீனம்


இந்த ராசிக்காரர்கள் தங்கள் உத்தியோகப் பணிகளைத் துல்லியமாக முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதம் வேலை மேம்படும் மற்றும் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் நன்மை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் துறையின் சார்பாக அதிக வேலை செய்யும் பொறுப்பைப் பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 3 ராசிகளுக்கு பண மழை நிச்சயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ