Amavasai | பண கஷ்டத்தில் இருப்பவர்கள் அமாவாசை பூஜை இப்படி செய்யலாம் - அதே பலன், அதிக செலவில்லை
Amavasai | பண கஷ்டத்தில் இருப்பவர்கள் அமாவாசை நாளில் எளிமையாக பூஜை செய்து அபரிமிதமான பலன்களை பெற முடியும்.
Amavasai Pooja, Karthigai Month | ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை (Amavasai) நாளும் சிறப்பானவையே. பண கஷ்டம், பித்ரு தோஷம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் சிக்கல், கணவன் - மனைவி பிரிதல் உள்ளிட்ட பல சிக்கல்களை தீர்க்க அமாவாசை பூஜை தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் ஆடம்பரமாக அமாவாசை பூஜை செய்வார்கள். கோயில்களுக்கு செல்வது, அங்கு அபிஷேகம், அன்னதானம் எல்லாம் கொடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, நல்ல காலம் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி செய்ய முடியுமா? என்றால் இல்லை. ஏற்கனவே கஷ்டத்தில் இருப்பவர்கள் எப்படி ஒரு கோயிலுக்கு செல்ல முடியும்?, அபிஷேகம் அன்னதானத்துக்கு செலவிட முடியும்.
கார்த்திகை அமாவாசை
கஷ்டத்தில் இருக்கும்போது மற்றவர்களை பார்த்து அவர்களைப் போல் நம்மால் அப்படி பூஜை அபிஷேகம் கொடுக்க முடியவில்லையே என வருந்த வேண்டாம். உங்களவில் ஒரு சூடம், ஒரு விளக்கு கடவுளுக்கு ஏற்றினால் கூட போதுமானது. இன்று கார்த்திகை அமாவாசை. அதனால் இந்த அமாவாசை நாளில் அதிக செலவுகள் இல்லாமல் எளிமையாக வழிபாடு செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | 2025-ல் ‘இந்த’ 5 ராசிக்காரர்கள் அமோகமாக இருப்பார்கள்! பாபா வாங்காவின் கணிப்பு!
அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை
பண கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். வீட்டில் ஒருவரோ அல்லது எல்லோரும் சேர்ந்து காலையிலேயே குளித்து விளக்கு ஏற்றிக் கொள்ளலாம். மதியம் எல்லோரும் இருந்தால் இஷ்ட தெய்வத்துக்கு படையிலிட்டு, தீபம் ஏற்றி, சூடம் மூலம் ஆராதனை செய்து வழிபடலாம். பின்னர், விரதம் இருந்தால் சாமிக்கு இட்ட படையலை எடுத்து முன்னோர்களுக்கு கொஞ்சம் வீட்டுக்கு வெளியே காகத்துக்கு வைத்துவிட்டு விரதம் முடிக்கலாம். அருகில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வரலாம். தொடர்ச்சியாக அமாவாசை விரதம் இருந்தால் நிச்சயம் பண கஷ்டம், முன்னோர் சாபம் எல்லாம் நீங்கும். குடும்பம் வளரும்.
பாரம்பரிய அமாவாசை விரதம்
பொதுவாக அமாவாசை நாளில் அருகில் இருக்கும் புன்னிய தலங்களுக்கு சென்று அங்கு குளிக்க வேண்டும். ஆறு, குளம், கடல் அருகே உள்ள கோயில்களுக்கும் சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம். தண்ணீரில் மூழ்கி எழும்போது முன்னோர்களை வேண்டி சாபங்களை நீக்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். மூன்று முறை இப்படி செய்ய வேண்டும். கடைசியாக தண்ணீரை இரு கைகளிலும் ஏந்தி சூரிய பகவானை பார்த்து வணங்கி தண்ணீரை ஆற்றுக்குள் நின்ற நிலையிலேயே விட வேண்டும். பின்னர் கோயிலில் வழிபட்டு ஏழைகள், வயதானவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். உங்களால் முடிந்தளவுக்கு அன்னதானம் கூட கொடுக்கலாம். கார்த்திகை அமாவாசையில் வீட்டில் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. பசு மாட்டிற்கு எள் கலந்த வெல்லம் கொடுக்கலாம். இப்படி செய்தால் உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.
மேலும் படிக்க | இன்று உருவாகும் லக்கின யோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ