2025 ஆம் ஆண்டு ‘இந்த’ 5 ராசிகளுக்கு அமோகமாக இருக்காம்! பாபா வாங்காவின் கணிப்பு..

Baba Vanga 2025 Zodiac Prediction : 2025ஆம் ஆண்டு புதுவருடம் வரவிருக்கும் சமயத்தில், வருங்காலத்தை கணித்து செல்லும், பாபா வாங்க எந்தெந்த ராசிகளுக்கு அடுத்த வருடம் நன்றாக அமையும் என்பதை கணித்து கூறுகிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2024, 02:30 PM IST
  • பாபா வாங்காவின் 2025ஆம் ஆண்டு கணிப்புகள்
  • 5 ராசிக்காரர்கள் அமோகமாக இருப்பார்களாம்
  • யாரை சொல்கிறார் தெரியுமா?
2025 ஆம் ஆண்டு ‘இந்த’ 5 ராசிகளுக்கு அமோகமாக இருக்காம்! பாபா வாங்காவின் கணிப்பு.. title=

Baba Vanga 2025 Zodiac Prediction : உலகில் உள்ள பிரபலமான தீர்க்க தரிசிகளுள் ஒருவர், பாபா வாங்கா. இவர், இதுவரை கணித்து கூறியிருக்கும் பல விஷயங்கள் அப்படியே நடந்தேறியிருக்கின்றன. பல்கேரியா நாட்டை சேர்ந்த இவர், தனது 12ஆம் வயதிலேயே பார்வையை இழந்தவர். பார்வை பரிபோனதால் கண் முன் நிகழ்வதை பார்க்க முடியாமல் போனதே தவிர, எதிர்காலத்தை தனது ஞானக்கண்களால் பார்க்கும் சக்தியை இவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர் உயிரிழப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன நிகழும் என்பதை குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். அதிலிருந்த பல்வேறு கணிப்புகள் நிறைவேறியிருக்கின்றன. 2025ஆம் ஆண்டில், எந்தெந்த ராசிகள் அமோகமாக இருக்கும் என்பது குறித்து பாபா வாங்க குறித்து வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் 5 ராசிகள் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி அவர் குறிப்பிட்டுள்ள கணிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம். 

மேஷம்:

12 ராசிகளில், முதலாம் ராசியாக விளங்குகிறது மேஷம். இந்த ராசி உடையவர்கள், அடுத்த வருடம் நல்ல செல்வ வளத்தை பெருவார்களாம். பல நாட்கள்காக அவர்கள் கண்ட கனவுகள் நிறைவேறி, நினைத்த காரியங்களில் வெற்றியும் அடைவார்களாம். இதுவரை வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த தடைகள் நீங்கி, பலரால் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவதாக பாபா வாங்கா கணித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

கும்பம்: 

கடந்த சில மாதங்களாக, வாழ்வில் கடினமான தருணங்களை எதிர்கொண்டு வருகின்றனர், கும்ப ராசிக்காரர்கள். இவர்களுக்கு, 2025ஆம் ஆண்டு, பொன்னான ஆண்டாக அமையுமாம். தங்களின் படைப்பாற்றலில் நல்ல எழுச்சியை பெற்றிருக்கும் இவர்கள், தங்களின் இலக்குகளை அடைவார்களாம். அடுத்த ஆண்டில், இவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படும் என பாபா வாங்கா கணித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

ரிஷபம்:

பல வருடங்களாக கடினமாக உழைத்து வரும் ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் 2025-ல் கிட்டுமாம். தனது திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற பல்வேறு வாய்ப்புகளை பெறும் இவர்கள், தொழில் ரீதியாக பெரிய உயரத்தை அடைவார்கள் என பாபா வாங்கா கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் உண்மையில் புத்திசாலி ஆனால் வெற்றிபெற மிகவும் சோம்பேறி!!

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2024ஆம் ஆண்டு இன்பம்-துன்பம் இரண்டும் இணைந்த ஆண்டாக இருந்திருக்கும். ஆனால் அடுத்த ஆண்டு, இவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஆண்டாக இருக்குமாம். புதிதாக இவர்கள் தொடங்கிய தொழில்களில் நம்ப முடியாத லாபம் கிடைக்கும் எனவும், இதுவரை கிடைக்காத வெற்றிகள் இவர்களை தேடி வரும் எனவும் பாபா வாங்காவின் கணிப்புகள் கூறுகின்றன. 

மிதுனம்:

2025ஆம் ஆண்டு, மிதுன ராசிக்காரர்களுக்கு முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டில், இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் பல விஷயங்கள் நடக்கும் என்று பாபா வாங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாம். இதுவரை பயந்து எந்த வித பெரிய முடிவுகளையும் எடுக்காமல் இருந்த இவர்கள், அடுத்த ஆண்டு அனைத்திலும் தைரியமாக செயல்படுவார்களாம். இவர்களுக்கு, நிதி ரீதியாக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கொடுக்கும் ஆண்டாக, 2025ஆம் ஆண்டு அமையும் என பாபா வாங்காவின் கணிப்பு கூறுகிறது. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இன்று உருவாகும் லக்கின யோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News