வேத ஜோதிடத்தில், சனி பகவான் நீதி மற்றும் கர்ம பலன்களின் கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். இதன் காரணமாக அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். கும்ப ராசியிலேயே அவர் ஜூன் 17, 2023 அன்று வக்ர பெயர்ச்சி ஆகவுள்ளார். அதன்பிறகு நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் வக்ர நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும் சில ராசிகளில் இதன் விளைவால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் இந்த காலத்தில் அமோகமான வெற்றியை பெறுவார்கள். 


சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பெரும் பலன்களை பெறவுள்ள ராசிகள்:


மேஷ ராசி:


மேஷ ராசிக்காரர்களின் ராசிக்கு 11 ஆவது ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர பெயர்ச்சியடைவார். இந்த வகையில் சனி வக்ரமாவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். சனிபகவானின் அருளால் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். அதே சமயம் நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் அதிக வெற்றி கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. 


ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்கள் இந்த நேரத்தில் நல்ல பலனைப் பெறுவதில் வெற்றி பெறுவார்கள். வங்கி மற்றும் இயந்திர பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய பணிகளை எளிதாக செய்து முடிப்பார்கள். இந்த நேரத்தில் உங்கள் மூத்தவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். ஏதேனும் தடைப்பட்ட வேலைகள் இருந்தால், ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த வேலைகளை முடுக்கிவிட்டால், இவற்றை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். 


கன்னி ராசி:


கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஆறாம் வீட்டில் வக்ரமாகவுள்ளார். இந்த வீட்டில் இருக்கும் பிற்போக்கு சனி உங்கள் எதிரிகளின் மீது வெற்றியைத் தருவார். இந்த கட்டத்தில், நீங்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். உயர்கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால், அந்த நேரத்தில் அதை முழுமையாக திருப்பிச் செலுத்துவீர்கள்.


இந்த காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கல்வித் துறையில் வெற்றி உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.   


மேலும் படிக்க | சனி ஜெயந்தியோடு வரும் ஜயேஷ்ட அமாவாசை..! கணவனின் ஆயுள் நீடிக்க செய்ய வேண்டிய பூஜை


தனுசு ராசி:


தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிலை மிக லாபகரமானதாக இருக்கும். இந்த வக்ர பெயர்ச்சி இந்த ராசியிம் மூன்றாம் வீட்டில் நடக்கும். இது ஒருவரின் உணர்வுத்திறன், தைரியம், அறிவாற்றல் ஆகியவற்றின் வீடாக உள்ளது. இந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்களுக்கு பயணங்களால் நன்மைகளை தரப்போகிறார். இந்த நேரத்தில், உங்கள் சகோதரர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


மதம், ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடையவர்கள் இந்த நேரத்தில் நல்ல பெயரைப் பெறலாம். இவர்களின் மரியாதை அதிகரிக்கும். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்களை ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வைப்பார். அந்த நேரத்தில் உங்கள் குருவின் அருளைப் பெற வாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். 


மேலும் படிக்க | ராகு-கேது பெயர்ச்சி 2023: எச்சரிக்கையுடன் சூதானமாக இருக்க வேண்டிய ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ