தீபாவளி முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்: குபேரரும், சனியும் சேர்ந்து அருள் புரிவார்கள்
Saturn Transit on Diwali 2022: இந்த ஆண்டு தந்தேரஸ் மற்றும் தீபாவளி முதல் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கவுள்ள அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்? எந்தெந்த ராசிகளில் சனிபகவானின் கருணை மழை பொழியவுள்ளது?
சனியின் இயக்கத்தால் தீபாவளியில் பம்பர் பலன்களை பெறவுள்ள ராசிகள்: தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பல காரணங்களும் ஐதீகங்களும் உள்ளன. தென் இந்தியாவில் நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம். வட மாநிலங்களில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். எனினும், அனைத்து இடங்களிலும் தீபாவளி நாளில் லட்சுமி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் வட மாநிலங்களில் செல்வத்தை அள்ளித் தரும் தந்தேரஸ் பண்டிகையும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு, தீபாவளி சமயத்தில், அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்தில் பயணிக்கவுள்ளார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது. இருளை போக்கி வெளிச்சத்தை அளிக்கும் தீபாவளி நேரத்தில் சனியின் இந்த நிலை மாற்றம் ஏற்படுவதால், இந்த ஆண்டு தீபாவளி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சனியின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், அக்டோபர் 23, 2022, தந்தேராஸ் நாளில், சனிபகவானின் இயக்க மாற்றம், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
இந்த வருடம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தீபாவளி முதல் குபேரனின் அருள் கிடைக்கத் தொடங்கும் என்றே சொல்லலாம். சனி பகவான் இவர்களுக்கு அதிகப்படியான செல்வத்தையும் முன்னேற்றத்தையும் அள்ளித் தருவார். இத்துடன் இதுவரை இவர்களின் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இனி அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள். இந்த ஆண்டு தந்தேரஸ் மற்றும் தீபாவளி முதல் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கவுள்ள அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்? எந்தெந்த ராசிகளில் சனிபகவானின் கருணை மழை பொழியவுள்ளது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | 59 ஆண்டுகளுக்கு பிறகு நாளை அற்புத கலவை, 5 ராசிகளின் கதி மாறும்
சனி பகவானும் குபேரரும் இந்த ராசிகள் மீது பண மழை பொழிவார்கள்
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தந்தேரஸ் மற்றும் தீபாவளி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சனி பகவானின் நேர் இயக்கத்தின் காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் பெரிய அளவிலான நன்மைகளை அடைவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் வீண் போகாது. ஆகையால், இந்த நேரத்தில் வேலை-வியாபாரத்தில் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பண ஆதாயமும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்கி சனி பல நன்மைகளைத் தருவார். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். இதுவரை தேடிக்கொண்டிருந்த வாய்ப்பு இப்போது கிடைத்துவிடும் என்றே சொல்லலாம். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பலமான நிதி நிலை காரணமாக அதிகப்படியான நிம்மதி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நேர் இயக்கம் பல நன்மைகளைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். பணவரவு அதிகரிப்பு நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். சில நல்ல செய்திகள் உங்கள் மனதை மகிழ்விக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நவம்பர் 24 ஆம் குரு பெயர்ச்சி, இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ