அக்டோபர் 2022 இல் செவ்வாய் பெயர்ச்சி: ஜோதிடத்தில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் ஒரு பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் நிலை மாற்றத்தின் தாக்கங்கள் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். இந்த மாற்றங்களால் சில ராசிகள் சுப பலன்களையும், சில ராசிகள் அசுப பலன்களையும் பெறுவதுண்டு. சில கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிக நல்ல காலத்தையும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான நேரத்தையும் கொண்டு வரும். அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் மேஷம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி என்று கூறப்படுகிறது. அதே சமயம் செவ்வாய் கிரகம் வலிமையையும் ஆற்றலையும் வழங்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. ஒரு மாதம் கழித்து செவ்வாயும் ஒரு ராசியை விட்டு வேறு ராசியில் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார கிரகங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சிம்மம்:


செவ்வாயின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இவர்களின் நிதி நிலையில் மாற்றம் ஏற்படும். மேலும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் குடும்பம் அமைதியாகவும் இருக்கும். இந்தப் மாற்றத்தின் போது நீங்கள் தொடங்கும் வேலையில் முழு வெற்றியைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | அக்டோபரில் பெரிய கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை, செல்வம் பெருகும்


கடகம்:


கடக ராசிக்காரர்களின் வாழ்விலும் செவ்வாயின் இந்த மாற்றம் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் அவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அல்லது பழைய வேலையில் புதிய பொறுப்புகளை பெறலாம். இந்த காலகட்டத்தில் சம்பளம் அதிகரிக்கலாம். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். விரைவில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். 


மிதுனம்:


அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இந்த நேரத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில்-வியாபாரத்தில் புதிய வெற்றிகள் உண்டாகும். குடும்பத்துடன் உறவு சிறப்பாக இருக்கும். இதற்கிடையில், நீங்கள் நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்கள் சமையலறையில் இந்த பொருள் இருக்க? மறந்து கூட தானமா கொடுத்துடாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ