சிம்மத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அதீத நன்மைகள், பண மழை பொழியும்
Venus Transit: சிம்ம ராசியில் சுக்கிரனின் பிரவேசம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, சுக்கிரனின் ராசி மாற்றம் இவர்களுக்கு என்ன பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: பணம், பொருள், மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் அதிபதியான சுக்கிரன் இன்று முதல் சிம்மத்தில் சஞ்சரிப்பார். சிம்ம ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சூரியன் சிம்ம ராசியின் அதிபதி ஆவார். சூரியன் ஏற்கனவே தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கிறார். மறுபுறம், சுக்கிரன் ஆகஸ்ட் 31, அதாவது இன்று முதல் செப்டம்பர் 23 வரை சிம்மத்தில் இருப்பார். இந்த நேரத்தில் மக்களின் நிதி நிலை, சுகங்கள், காதல் வாழ்க்கை ஆகியவற்றின் மீது சுக்கிரனின் தாக்கம் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசியில் சுக்கிரனின் பிரவேசம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, சுக்கிரனின் ராசி மாற்றம் இவர்களுக்கு என்ன பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். இவர்கள் இந்த காலத்தில் பல சாதனைகளை செய்வர். வாழ்க்கை துணையுடன் சண்டையிடாமல் இருந்தால் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைப் பேறு ஆசை நிறைவேறும். பண வரவு சாதகமாக இருக்கும். வசதிகள் பெருகும். பழைய ஆசைகள் நிறைவேறும். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். இவர்கள் வாழ்வில் செல்வமும் செழிப்பும் பெருகும். நீங்கள் ஒரு கார் அல்லது மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். தாயுடன் உறவு சிறப்பாக இருக்கும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். கடன் பெறலாம். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!
சிம்மம்:
சுக்கிரன் கிரகம் சிம்ம ராசியில்தான் பிரவேசிக்கிறது. இதனால் சிமம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். காதல், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். மொத்தத்தில், இந்த நேரம் அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு அதிபதியும் சுக்கிரன் என்பதால், சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த பணிகள் வேகமாக நடைபெறும். வருமானம் அதிகரிக்கும். பல இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். இந்த நேரம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். காதல் விஷயத்திலும் இந்த நேரம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்:
சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களைத் தரும். இவர்களின் திருமண உறவு நன்றாக இருக்கும். பல காலங்களாக இருந்த பிரச்சனை தீரும். தனியாக இருப்பவர்களுக்கு துணை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை இப்போது எடுப்பீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரம். பல வித லாபங்களை பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தின பலன் - துலாம் முதல் மீனம் வரை; வேலையில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ