மேஷ ராசியில் ராகு: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்கிறது. இந்த பெயர்ச்சியின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்களின் இந்த பெயர்ச்சிகள், சில சமயங்களில் சுப பலன்களையும், சில சமயங்களில் அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், ராகு கிரகம் மேஷ ராசியில் பிரவேசித்திருப்பதன் காரணமாக, 3 ராசிகளின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இதனால், இந்த ராசிக்காரர்கள் வெற்றிகளை அள்ளிக் குவிப்பார்கள்.
மிதுனம்: கேந்திர திரிகோண ராஜயோகம் அமைவதால் தொழில், வியாபாரத்தில் நம்ப முடியாத அளவிற்கு வெற்றியைப் பெறலாம். ஜாதகத்தில் ராகு கிரகம் 11வது வீட்டில் சஞ்சரித்துள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்திற்கான வீடு என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மேலும், புதிய வழியில் வருமானம் கிடைப்பதன் மூலம் நிதி நிலை வலுவடையும். வெளிநாட்டில் இருப்பவர்களும் நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மறுபுறம், தொழில் மற்றும் வணிகத்தில் இருப்பவர்கள் வெற்றியைக் காணலாம். மறுபுறம், மிதுனம் புதன் கிரகத்தால் ஆளப்படும் நிலையில், புதன் வணிகத்திற்கான கிரமாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் புதிய ஆர்டர்களைப் பெறலாம். மறுபுறம், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதை செய்ய ஏற்ற நேரம் இது.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது தோஷம்; சில எளிய பரிகாரங்கள்!
கடகம்: ராகு பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள திரிகோணமான ராஜயோகம் கடக ராசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ராகு கிரகம் பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில், ஜாதகத்தில் பத்தாம் வீட்டிற்கு மாறிவிட்டது. இந்த வீடு வேலை மற்றும் தொழிக்கான கிரகமாக கருதப்படுகிறது. எனவே, புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேலும், வியாபாரத்தில் சிறந்த வகையில் வெற்றியைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. புதிதாக தொழில் தொடங்க சரியான நேரம் இது. அதே நேரத்தில், பங்குச் சந்தை, ஊக வணிக மற்றும் லாட்டரிகளில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில் வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கலாம். மேலும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மீனம்: ராகுவின் சஞ்சாரத்தால் ஜாதகத்தில் மீன ராசிகளுக்கு உருவாகியுள்ள திரிகோண ராஜயோகம் நல்ல நிதி ஆதாயத்தை தரும். ஏனெனில் ராகு கிரகம் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் சஞ்சரித்துள்ளது. இது பணம் மற்றும் பேச்சுத்திறனுக்கான வீடு என்று கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். இதனுடன் பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். உங்களின் பலம் அதிகரித்து எதிரிகளை வெல்வீர்கள். மறுபுறம், அரசியலில் தீவிரமாக இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். மேலும், உங்கள் வணிகத்தில் நல்ல லாபம் ஈட்டலாம். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் அதிகரிக்கும். கடும் உழைப்பினால் கிடைக்கும் தொழில் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மேலும் படிக்க | Astro: ‘இவற்றை’ தானம் செய்தால் பல தலைமுறைகள் சிறப்பாக வாழ்வார்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ