புதன் கிரகம், நவகிரகங்களில் மிகவும் மென்மையான குணத்தை தரும் கிரகம், பண்பும் நாசுக்கும் தெரிந்தவர்களுக்கு புதன் கிரகத்தின் தாக்கம் இருக்கும். அதுமட்டுமல்ல, புதன் நல்ல நிலையில் இருந்தால், தகவல் தொடர்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதேபோல, நவகிரகங்களில் புதன், கிரகங்களின் இளவரசர் என கருதப்படுகிறார். புதன் மாதத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். 2024ஆம் ஆண்டில் புதன் பகவான், 16 முறை ராசியை மாற்றுகிறார், 3 முறை வக்ர கதியில் இயங்குவார் என ஜோதிட கணக்கீடுகள் கூறுகின்றன..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பிற்போக்கு இயக்கம்


தற்போது கடக ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன், தனது வக்ர கதியில் அதாவது பிற்போக்கு இயக்கத்தை மாற்றி, இன்று முதல் நேராக சுற்றத் தொடங்குவார். கடகத்தில் 13 நாட்கள் சஞ்சரித்த பிறகு, புதன் செப்டம்பர் 04, 2024 அன்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். இன்றைய புதன் மாற்றம், உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும். யாருக்கெல்லாம் இந்த புதனீன் இயக்க மாற்றம் நன்மைகளைத் தரும் என்று தெரிந்துக் கொள்வோம்.  


கன்னி


கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையை விரும்பும் கன்னி ராசியினருக்கு தற்போது நல்ல காலம் தொடங்குகிறது. உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் புதனின் சஞ்சார மாற்றமும், சிம்ம ராசி பெயர்ச்சியும் உங்களுடைய மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைப் பார்த்து பிறர் பொறாமைப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். நிதானமாகவும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டால், சமூகத்தில் அந்தஸ்து உயரும்.


மேலும் படிக்க | சனீஸ்வரர் ஜாதகத்தில் எந்த லக்னத்தில் இருந்தால் சூப்பர்? சனீஸ்வரரின் பார்வை கெடுபலன்கள்!


சிம்மம்


படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டும் சிம்ம ராசியினருக்கு தற்போது புதனின் சஞ்சார மாற்றம், உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். காதல் மற்றும் கேளிக்கைக்கான அணுகுமுறையும் மாறும், உங்களின் செயல்பாடுகளின் நிதானமும், தெளிவும் வர புதனின் சன்ச்ஜார மாற்றாம் உதவும். கவனமாக செயல்பட்டால், குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும், ஆனால், கருத்து வேறுபாடுகளை கவனமாக கையாள வேண்டும்.  


தனுசு


குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள், வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவது, சில மாற்றங்களை செய்வது என வீட்டிற்காக செலவு செய்வீர்கள். ஆனால், தேவையில்லாமல் பணம் செலவு செய்ய வேண்டாம். செலவுகளை சுப செலவுகளாக அமற்றிக் கொள்ளுங்கள் தனுசு ராசிக்காரர்களே...


விருச்சிகம்


எப்போதும் சிறந்த தரத்தை விரும்பும் உங்களுக்கு, அதிருப்தி கொடுத்து வந்த நிலை மாறும். உங்கள் பழக்கவழக்கங்களை பிறர் பாராட்டும் நிலை ஏற்படும். தவறான செயல்களைச் செய்பவர்களை கண்டிக்கும் உங்களுடைய சுபாவம் கெட்ட பெயரை வாங்கித் தருவதாக குடும்பத்தினர் உங்கள் மீது வைத்து வந்த குற்றச்சாட்டுகள் மறையும் காலம் இது. ஏனென்றால், உங்களுடைய செயல்பாடுகள், மிகப் பெரிய நன்மை ஒன்றை செய்து, உங்கள் மதிப்பை அதிகரிக்கும்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செல்வமகளின் அருளைப் பெற சுலபமான பழக்கவழக்கங்கள்! பணதட்டுப்பாட்டை நீக்கும் வழிபாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ