புதன் அஸ்தமனம்.... வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

Mercury Transit: அஸ்தமனம் ஆகும் புதன், பலவீனம் அடையும். மேலும் இந்த காலகட்டத்தில் புதன் வக்ர நிலையில் இருக்கும். புதனின் இந்த அஸ்தமனம் மூன்று ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடியது என்பதால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2024, 02:41 PM IST
  • புதனின் அஸ்தமனம் பிரச்சினைகளைக் கொடுக்கும்.
  • நிதிநிலை பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.
  • பயணத்தின் போது நஷ்டம் ஏற்படலாம்.
புதன் அஸ்தமனம்.... வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்கும் ‘சில’ ராசிகள்! title=

Mercury Transit Effects: புதன் உதயம் பலன்கள்: ஜோதிடத்தில் கிரக பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. புத்திசாலித்தனம் அறிவுத்திறன் ஆகியவற்றை வழங்கும் கிரகமான புதன்,. பிப்ரவரி ஒன்றாம் தேதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார்., புதன் பயிற்சி காரணமாக அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை காணலாம். பிப்ரவரி ஒன்றாம் தேதி புதன் கிரகம் மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைந்த நிலையில், எட்டாம் தேதி அஸ்தமனம் ஆகிறார். 

அஸ்தமனம் ஆகும் புதன், பலவீனம் அடையும் நிலையில், மார்ச் 11ம் தேதி உதயம் ஆகிறது. மேலும் இந்த கால கட்டத்தில் புதன் வக்ர நிலையில் இருக்கும். புதனின் இந்த அஸ்தமனம் மூன்று ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடியது என்பதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேஷ ராசி புதன் பெயர்ச்சி பலன்கள் (Aries Zodiac)

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் பிரச்சினைகளைக் கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அவ்வளவாக கை கொடுக்காது. பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதனால் கவனமாக இருப்பது முக்கியம். எந்த முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால், தீவிரமாக சிந்தித்து செயல்படவும். கவன குறைவு, பொறுப்பற்ற பேச்சு ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்கவும். நிதிநிலை பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. பயணத்தின் போது நஷ்டம் ஏற்படலாம். போட்டியாளர்களால் சிறிது பாதிப்பு ஏற்படலாம். 

மேலும் படிக்க | தனயோகம்... மகாலட்சுமியின் அருளால் செல்வமும் வளமும் பெரும் 'சில' ராசிகள்!

மிதுன ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் ( Gemini Zodiac)

மிதுன ராசிக்காரர்கள் பல வகைகளில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் உண்டாகலாம். தொழிலில் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணியில் இருப்பவர்களுக்கும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Leo Zodiac)

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தபனத்தால் நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகள் மூலம் அதிக வருமானம் கிடைக்காது. இதனால் ஏமாற்றம் ஏற்படலாம். எந்த முக்கிய முடிவையும் எடுக்கும் முன் அனுபவம் மிக்க நபர்களை கலந்தாலோசித்து. மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கடன் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். மன உளைச்சல் அதிகரிக்கலாம்.

புதனின் அருளை பெறவும், கெடுபலன்களை குறைக்கவும் பரிகாரங்கள்

புதனின் கெடுபலன்களை குறைக்க, புதன் கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும், பச்சை வளையல் சாற்றி வழிபாடு செய்வதும், பசுவிற்கு தீவனம் கொடுப்பதும் மிகவும் புண்ணியமும், சாதக பலனையும் தரும்.மேலும், அடுத்த 16 நாட்களுக்கு தொடர்ந்து ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும், அந்த கோவிலுக்கு பால் அல்லது அரிசி தானம் செய்வதும், காகங்களுக்கு உணவு அளிப்பதும் பலன் கொடுக்கும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மகரத்தில் புத-ஆதித்ய யோகம்... அனைத்து ராசிகளுக்கான முழு பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News