குரு பெயர்ச்சி 2024 பலன்கள்: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கிரகமும் தனது ராசியை மாற்ற ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துககொள்கிறது. கிரகங்களின் அதிபதியான வியாழன் சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இப்போது 2024 ஆம் ஆண்டில், தேவகுரு வியாழன் ராசியை மாற்றப் போகிறார். குரு தற்போது மேஷ ராசியில் அமர்ந்து அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டில் ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். பல ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றத்தின் (Jupiter Transit In Taurus On 1 May, 2024) பலன் காரணமாக அதிர்ஷ்டம் கூடும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பெயர்ச்சி 2024 எப்போது?
தற்போது குரு மேஷ ராசியில் வக்ர நிலையில் (Guru Vakra Peyarchi) நகர்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைவார்.,அதன்பிறகு அடுத்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி 2024, குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி (Guru Peyarchi 2024) அடைவார்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்!


மேஷ ராசி (Aries Zodiac Sign): வரும் 2024 ஆண் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்று தரும். அதேபோல் மேஷ ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் கூடும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். குருவின் அருளால் செல்வம் சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்தக் காலத்தில் கடனில் இருந்து விடுபடலாம். வரும் 2024 ஆம் ஆண்டு வணிக வகுப்பினருக்கும் லாபம் நிறைந்ததாக இருக்கும்.  குடும்பத்தில் உங்களின் புகழ் உயரும். திடீர் பண ஆதாயம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.


சிம்ம ராசி (Leo Zodiac Sign): 2024 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் வருமானம் கூடும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். வருமானம் அதிகரிக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும்.


கன்னி ராசி (Virgo Zodiac Sign): குரு பகவானின் வியாழனின் சஞ்சாரம் / பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைவேறும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலம், வீடு, வாகனம் வாங்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனியால் அக்டோபர் 15 வரை இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ