சனியால் அக்டோபர் 15 வரை இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்

Saturn Retrograde 2023: சனி தேவன் வக்ர நிலையில் நகர்கிறார். அக்டோபர் 15 வரை இதே நிலையில் தான் சனி நகர்வார். இதனால் வக்ர சனி சில ராசிக்காரர்களுக்கு பலன் தரும். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஜோதிடத்தில் சனி மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி நீதியின் கடவுளாவார். அத்தகைய சூழ்நிலையில், மார்ச் 2023 முதல், சனி கிரகம் ராகுவின் நக்ஷத்திரமான சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார். இந்த சதய நட்சத்திரத்தில் சனி பகவான் 2023 அக்டோபர் 15 ஆம் தேதி வரை இருப்பார். 

1 /6

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மிகவும் பலனளிக்கப் போகிறது. புதிய வேலை அல்லது புதிய திட்டத்தை செயல்படுத்த இதுவே சரியான நேரம். வக்ர சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும்.

2 /6

மிதுன ராசி: வக்ர சனி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை தருவார். இவர்கள் அக்டோபர் 15 வரை பல வெற்றிகளை அடைவார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களின் கனவுகள் நிறைவேறும்.

3 /6

சிம்ம ராசி: வக்ர சனி சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். இந்த காலகட்டத்தில், தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். நல்ல நிதி ஆதாயம் உண்டாகும்.

4 /6

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனி சாதகமான பலனைத் தருவார். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். தொழில் துறையில் கொடிகள் நடும் நேரம் இது. இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.  

5 /6

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நன்மை தரும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். அதே சமயம் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் பெறுவீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.