தினசரி ராசிபலன்: அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் தங்களுடைய சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா, பாதகங்கள் இருந்தால் எவ்வாறு கவனமாக இருப்பது என்பதை திட்டமிட்டு இன்றைய தினத்தை நல்லபடியாக வாழ தினசரி ராசிபலனை தெரிந்துக் கொள்ளுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசிபலன் - Aries


இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், பண வரத்து இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் நல்ல ஆரோக்கியத்தைத் தக்கவைக்க சுய ஒழுக்கம் முக்கியமாக இருக்கும்.  


ரிஷப ராசிபலன் - Taurus 


இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!


மிதுன ராசிபலன் - Gemini 


இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.


கடக ராசிபலன் - Cancer 


இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


சிம்ம ராசிபலன் - Leo 


இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.


கன்னி ராசிபலன் - Virgo 


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.


துலாம் ராசிபலன் - Libra 


இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.  


விருச்சிக ராசிபலன் - Scorpio  


இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி எதிர்பார்த்த லாபம் கிட்டும். 


தனுசு ராசிபலன் - Sagittarius 


உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்களுடன் ஃபிட்னஸ் துறையில் இணைவது நல்லது செய்ய வாய்ப்புள்ளது. ஒரு வெளியூர் பயணம் கிடப்பில் உள்ளது, ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகமாக இருக்காது. மூதாதையர் சொத்தில் சில மாற்றங்களைத் தொடங்கலாம். தொழில் ரீதியாக உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உங்கள் பணத்தை ஒரு நல்ல நிதி திட்டத்தில் பாதுகாப்பாக நிறுத்த முடியும்.


மேலும் படிக்க | மேஷத்தில் சந்திரன்... அதிர்ஷ்டத்தில் நனைய உள்ள ‘சில’ ராசிகள்!


மகர ராசிபலன் - Capricornus 


இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.


கும்ப ராசிபலன் - Aquarius 


உடலை பொருத்தமாக இருக்க நீங்கள் என்ன செய்தாலும் அது போதுமானதாக இருக்காது, எனவே வழக்கமான பயிற்சியைச் சேர்க்கவும். உயர் பதவிகளில் உள்ள சிலரால் பண பலத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். முன்னோர் இல்லத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதுவும் தானாகவே நகராது என்பதால், நீங்கள் உள்நாட்டு முன்னணியில் விஷயங்களைத் தள்ள வேண்டும்! சமூக முன்னணியில் உங்கள் முன்முயற்சி உருவாக்கிய பதிலில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.


மீனம் ராசிபலன் - Pisces 


இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.


மேலும் படிக்க | குபேரனையும் குப்பைமேட்டுக்கு கொண்டு வரும் ராகு பெயர்ச்சி! புத்தியைத் தரும் கேது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ