Godess Parvathi Worship : இந்து மத புராணங்களின்படி, உலகில் உள்ள 108 சக்தி பீடங்களில் சக்தியின் வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அன்னை சக்திக்கு உரிய இந்த இடங்களில் அமையப் பெற்றுள்ள ஆலயங்களில் மிகவும் வித்தியாசமானது மட்டுமல்ல தனிச்சிறப்பு வாய்ந்தது காமாக்யா கோவில். அஸ்ஸாம் மாநிலம் கெளஹாதி நகரில் உள்ள நீலாஞ்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவனின் ருத்ரதாண்டவம்
பார்வதி தேவி, தனது தந்தை தட்சனால் ஏற்பட்ட அவமானத்தால் துக்கத்தில் உயிரிழந்த மனைவியின் சோகம் சிவனுக்கு ரெளத்திரத்தை ஏற்படுத்தியது. சதி பார்வதியின் உடலை கையில் ஏந்தியவாறு ருத்திர தாண்டவம் ஆடிய சிவனின் கோபத்தை கட்டுப்படுத்த வழியறியாமல் உலகம் தவித்த நிலையில், சிவனை சாந்திப்படுத்த விஷ்ணு தனது சக்ராயுதத்தை பயன்படுத்தினார்.


கையில் இருந்த சடலம் இல்லாமல் போனால் தான் சிவனின் கோபம் தணியும் என்பதை உணர்ந்த விஷ்ணு, சக்கரத்தை ஏவி, சதியின் உடலைப் பல துண்டங்களாக்கும்போது, அவை நூற்றியெட்டு பாகங்களாக துண்டாகி, பூமியில் விழுகின்றன. சக்தி அன்னையின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக வணங்கப்படுகின்றன.


அன்னை சதியின் யோனியும் கர்பப்பையும் விழுந்த இடம் தான் அசாம் மாநிலம் காமாக்யா ஆலயம் அமைந்திருக்கும் இடம் ஆகும். அன்னையின் ஆலயத்தில் விக்கிரகம் கிடையாது. பெண்ணின் யோனி வடிவம் மட்டுமே உள்ளது. வழக்கமாக பெண்களின் பிறப்புறுப்பில் யோனிக்கு அடுத்து இருக்கும் கருப்பையைப் போல, காமாக்யா கோவிலிலும், யோனிக்கு அடியில் அன்னையின் கருப்பை இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. 


மேலும் படிக்க | எந்த கிழமையில் பிறந்தவர் ஆக்ரோஷமானவர்? திங்கள் முதல் ஞாயிறு வரை! பிறந்த கிழமை பலன்கள்


தாய்மை, பெண்மை, யோனி, கருப்பை ஆகியவற்றுக் காரணமான உடல் பாகங்கள் விழுந்த இடத்தை மக்கள் வணங்குகின்றனர். ஜூன் மாதத்தில் தேவிக்கு உதிரப் போக்கு ஏற்படுவதாக நம்பிக்கை இருக்கிற்து. இதற்கு கரணம், ஜூன் மாதத்தில் மட்டும், காமாக்யா கோவிலுக்கு அருகில் பாயும் பிரம்மபுத்திரா நதி சிவப்பு நிறத்தில் செந்நீராக மாறி ஓடுகிறது. இது பெண்களின் மாதவிடாய் உதிரத் தீட்டு போல, அகிலத்தை ஆளும் அன்னையின் தீட்டு என நம்பப்படுகிறது.


ஜூன் மாதத்தில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்படும்போது, நீரூற்று வந்துகொண்டிருக்கும் கர்ப்பகிரகத்தில் யோனியில் இருந்து வரும் நீர் சிவப்பு நிறமாக மாறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், காமாக்யா கோவிலில் அம்புவாச்சித் திருவிழா வெகு கோலாகலமாக அனுசரிக்கப்படுகிறது.


திருவிழாவின்போது, மூன்று நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டுப் பின் திறக்கப்படுகிறது. கோவிலில் அன்னையின் கர்பக்கிரகம் தரை மட்டத்துக்குக் கீழே சிறிய குகை அறையாக அமைந்திருக்கிறது. இதைப்பார்க்கும்போதே கருவறை என்பதன் பொருள் புரியும். செங்குத்தான படிகளில் இறங்கி காமாக்யா கோவிலின் கர்ப்பகிரகத்திற்குள் சென்றால், காமாக்யா அன்னையை யோனி வடிவில் தரிசிக்கலாம்.


அங்குள்ள அன்னையின் யோனி வடிவிற்குக் செம்பருத்திப் பூக்களாலும் சிவப்புத் துணியினாலும் அலங்காரம் செய்யப்படும். அங்கு ஊற்றெடுக்கும் நீர் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என நம்பப்படுவதால், அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதே பிரசாதம் ஆகும். 


காமாக்யா என்பதன் மற்றொரு பொருள் இச்சைகளை பூர்த்தி செய்வது என்பதாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னை காமாக்யா தேவியை வணங்கினால், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.  


மேலும் படிக்க | ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ