Sani Nakchatra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிக முக்கியமான கிராமமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் சனிபகவான் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது. ராசிகள் தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் கிரகங்களில் ஏற்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் ஆறாம் தேதி சனிபகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். தற்போது சனிபகவான் சதய நட்சத்திரத்தில் உள்ளார். ஏப்ரல் மாதம் அவர் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் இந்த ராசியிலேயே நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். 


சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சிகளின் நிறையும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


ரிஷபம் (Taurus)


ஜோதிட சாஸ்திரப்படி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். 


கன்னி (Virgo)


கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி சுபமானதாக அமையும். இவர்களது பொருளாதார நிலை மேம்படும். சனி நட்சத்திர பெயர்ச்சி காலத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான வெற்றிகள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!


விருச்சிகம் (Scorpio)


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதே செலவழிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில்  அதிகப்படியான லாபம் கிடைக்கும்.


மகரம் (Capricorn)


மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி பல விதங்களில் சுகமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். சனி பகவானின் அருளால் இவர்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி அனைத்தும் நீங்கி பணவரவு அதிகமாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பணம் ஈட்டுவதற்கான பல வழிகள் பிறக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.


கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி பல விதமான நற்பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் கூடும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏப்ரல் மாத சூரிய கிரகணம் ஏற்படுத்தும் கவலையால் மனம் வருத்தமடையப் போகும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ