நிறைவுபெறும் குரு சண்டாள யோகம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசிகள் மட்டுமல்லாமல், அவற்றின் இயக்கங்களும், உதய, அஸ்தமன நிலைகளும் மாறுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றங்களால் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப விளைவுகள் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக, பல நன்மைகளை செய்யும் கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த காலகட்டத்தில், குரு, அஸ்வனி நட்சத்திரத்தை விட்டு வெளியேறி பரணி நட்சத்திரத்திற்கு நகர்வார். ராகு கிரகம் அஸ்வனி நட்சத்திரத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் குரு-ராகுவின் சேர்க்கையால் உருவாகிய குரு சண்டாள யோகம் கலையும், அதாவது முடிவடையும். இதன் காரணமாக உருவாகும் சுப பலன்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி அதிக அளவில் பொங்கும். எடுத்த அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார மூன்று ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


மிதுன ராசி


குரு ராகுவின் சேர்க்கையால் உருவான குரு சண்டாள தோஷம் நீங்கி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நாள் தொடங்கும். இந்த நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் புதாதித்ய ராஜயோகத்துடன் பத்ர ராஜ யோகமும் உருவாகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், வணிக வர்க்கத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரம் அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், கற்கள் மற்றும் ஆடைகள் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அதே சமயம் பழைய முதலீடுகளும் இந்த காலத்தில் பலன் தரும். இப்போது பணியிடத்தில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களது அனைத்து பணிகளையும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். 


நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். இது உங்கள் நிதி சிக்கல்களைத் தீர்க்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மகிழ்ச்சியாக இருந்து முன்னேறுவீர்கள். இதனுடன், உங்கள் முன்னேற்றத்திலும் நீங்கள் திருப்தி அடைவீர்கள்.


மேலும் படிக்க | சூரியனால் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்


கடக ராசி


கடக ராசிக்காரர்களுக்கு குரு-ராகு சேர்க்கையால் உருவான சண்டாள தோஷம் விலகுவதால் பல வித சிறப்பு நன்மைகள் உண்டாகும். குரு பகவான் மற்றும் ராகு இருவராலும் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கௌரவமும், புகழும் உயரும். பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குறிப்பிட்ட இடத்திற்கு சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். திடீர் பணவரவு மற்றும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


சிம்ம ராசி


சிம்ம ராசிக்காரர்கள் குரு-ராகுவின் சண்டாள யோகம் நீங்குவதால் பண பலன்கள் கிடைக்கும். வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அரசின் திட்டங்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களின் திட்டங்கள் வெற்றி பெறும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். இது முதலீடு செய்ய ஏற்ற காலமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால், எதிர்கலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வக்ர சனி, ராகு - கேது: வரும் 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ