வக்ர நிலையில் சனி, ராகு, கேது: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்.. பம்பர் பண வரவு

Shani, Raku, Ketu Vakri: சனி, ராகு மற்றும் கேதுவின் வக்ர இயக்கங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 19, 2023, 11:51 AM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனியும், ராகு-கேதுவும் நல்ல பலன்களைத் தருவார்கள்.
  • பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • உடல்-மன வலிகள் நீங்கும்.
வக்ர நிலையில் சனி, ராகு, கேது: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்.. பம்பர் பண வரவு title=

சனி ராகு கேது வக்ரி 2023: வேத ஜோதிடத்தில், அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றன. அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டு காலம் தங்கி இருக்கிறார். ஆகையால் அவரது தாக்கம் ராசிகளில் மிக அதிகமாக இருக்கின்றது. 

பொதுவாக கிரகங்களின் வக்ர இயக்கம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதுவும் சனி மற்றும் ராகு-கேது கிரகங்களின் பிற்போக்கு இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் இந்த கிரகங்களின் வக்ர நிலை மக்களின் வாழ்க்கையில் கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஆனால், சில சமயம் இந்த வக்ர நிலையால் சில ராசிகளுக்கு அமோகமான விளைவுகளும் ஏற்படுவதுண்டு. 

சனி பகவான் ஜூன் 17 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். மறுபுறம், ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில் கிரகங்களாக உள்ளன. இந்த வழியில் இந்த 3 முக்கியமான கிரகங்கள் ஒன்றாக தற்போது வக்ர நிலையில் உள்ளன. நவம்பர் 4, 2023 வரை சனி கும்ப ராசியில் பிற்போக்கு நிலையிலேயே இருப்பார். அதேசமயம் ராகுவும் கேதுவும் 30 அக்டோபர் 2023 வரை இந்த நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில் ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் அப்போது பெயர்ச்சியாவார்கள். ஆனால் அதற்கு முன் அக்டோபர் 30 வரை சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

சனி, ராகு மற்றும் கேதுவின் வக்ர இயக்கங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!

சனி, ராகு-கேது வக்ர இயக்கம் இந்த ராசிக்காரர்களை செல்வந்தர்களாக்கும்

மிதுன ராசி

சனி, ராகு, கேதுவின் வக்ர சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் இவர்களுக்கு அவர்களின் தொழிலில் பதவி உயர்வு, ஊதிய உயர்வை அளிக்கக்கூடும். வருமானமும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். இது உங்கள் நிதி சிக்கல்களைத் தீர்க்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மகிழ்ச்சியாக இருந்து முன்னேறுவீர்கள். இதனுடன், உங்கள் முன்னேற்றத்திலும் நீங்கள் திருப்தி அடைவீர்கள்.
  
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனியும், ராகு-கேதுவும் நல்ல பலன்களைத் தருவார்கள். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல்-மன வலிகள் நீங்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வருமான அதிகரிப்பு பொருளாதார நிலையில் பலம் தரும். மேலும், நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த தொகையும் இந்த நேரத்தில் கிடைக்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரை சனியின் வக்ர சஞ்சாரமும், ராகு-கேதுவும் சாதக பலன்களைத் தரும். இந்த மூன்று கிரகங்களின் அருள் மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும். பண பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக முட்டுக்கட்டையாக இருந்த சம்பள உயர்வு தற்போது கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணைக்கு நேரம் கொடுங்கள், அவரை நன்றாக நடத்துங்கள். இது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ரமடையும் சனி - ராகு - கேது! வரும் 6 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு கெட்ட காலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News