Mercury Transit in Aries: ஞானத்தை வழங்கும் காரணியான புதனின் பெயர்ச்சி கண்டிப்பாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. கிரகங்களின் நிலை மாறிக்கொண்டே இருப்பதோடு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளையும் மாற்றுகின்றன. தற்போது புதன் மீன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், மே 10ம் தேதி மாலை 06:39 மணிக்கு மேஷ ராசியில் பிரவேசிப்பார். சுக்கிரன் ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகி வருகிறது. இது தவிர, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாகிறாது. ஏனெனில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி புதன் மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். திரிகோண வீட்டிற்கு அதிபதியும், கேந்திர வீடான அதிபதியும் சேர்ந்து இருக்கும் போது கேந்திர திரிகோண யோகம் உருவாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பெயர்ச்சியினால் இந்த இரண்டு ராஜயோகங்கள் இணைந்து உருவாக்குவது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த யோகம் மே 10 முதல் மே 19 வரை நீடிக்கும். ஏனென்றால் சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசியில் நுழைவார். இந்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு ராஜயோகங்கள் சேர்ந்து உருவாகும் பலன்கள் (Lucky Zodiacs) அதிகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...


மேஷ ராசி (Aries Zodiac)


மேஷ ராசியினருக்கு புதன் பெயர்ச்சி மற்றும் லக்ஷ்மி நாராயண யோகம் சிறப்பான பலன்களைத் தரும். லட்சுமி தேவியின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டும். இத்துடன் கைக்கு வராமல் நிலுவையில் இருந்த பணமும் கிடைப்பதுடன் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறலாம். சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோரின் ஆசீர்வாதத்தால், வேலையில் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படலாம். சம்பள உயர்வுடன், திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரத்தைப் பற்றி குறிப்பிடுகையில், புதிய தொழில் தொடங்குவது இந்த காலகட்டத்தில் நன்மை பயக்கும். இதனுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழிலிலும் லாபம் கிடைக்கும்.


மிதுன ராசி (Gemini Zodiac)


மிதுன ராயினருக்கு, புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. புதன் மற்றும் சுக்கிரனின் பரிபூரண அருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நம்பிக்கை அதிகரிக்கும். இதனுடன், உங்கள் பேச்சுத் திறன மற்றும் சிந்திக்கும் திறன் உங்களுக்கு புகழைக் கொண்டு வந்து சேர்க்கும். அனைத்து துறையிலும் வெற்றி அதிகரிக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படலாம். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும். இதனுடன், வேலையில்லாதவர்கள் அல்லது புதிய வேலை தேடுபவர்கள் பல வாய்ப்புகளைப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இப்போது நீங்கள் தேவையற்ற செலவுகளிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


மேலும் படிக்க | Astro: செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரரின் அருள் பெற்ற ‘3’ ராசிகள்! 


துலாம் ராசி (Libra Zodiac)


புதன் பெயர்ச்சி காரணமாக ஏற்படும் லக்ஷ்மி நாராயண யோகமும், கேந்திர திரிகோண ராஜயோகமும் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் தரும். இந்த ராசியில் ஏழாம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைவு நடைபெறுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும், சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்கும். பணியில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம். எனவே, உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறலாம். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண கை கூடி வரலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ