ஜாக்பாட்! சனியால் இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் நாளை முதல் மினுமினுக்கும்

Shani Jayanti 2023: சனி ஜெயந்தி 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக தரும். நாளை, மே 19 முதல் இவர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும், மேலும் ஏராளமான செல்வத்தையும் வெற்றியையும் பெறலாம்.
சனி ஜெயந்தி 2023 ராசிபலன்: சனி தேவன் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர் என்று அறியப்படுகிறார். சனி பகவான் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது. இவர் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சனி ஜெயந்து மே 19, வெள்ளிக்கிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது. சனி ஜெயந்தி என்பது சனிபகவானை மகிழ்விப்பதற்கும் அவருடைய ஆசிகளைப் பெறுவதற்கும் உகந்த நாள். இம்முறை சனி ஜெயந்தி அன்று சனி தனது மூல திரிகோண ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ராஜயோகம் செய்கிறார். இந்த நிலை 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பும் பெரும் வெற்றியும் பெறலாம். எனவே சனி ஜெயந்தி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி ஜெயந்தி அன்று எந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சுப பலன்கள் கிடைக்கும்
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி மிகவும் மங்களகரமான பலன்களைத் தரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிபதியான சுக்கிரன் சனியின் நட்பு கிரகம் என்பதால் இந்த ராசிக்காரர்களிடம் சனி எப்போதும் கருணை காட்டுகிறார். சனி ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு உயர் பதவி, பணம், வருமான உயர்வு போன்ற பலன்களை தரக்கூடும். வாழ்வில் மரியாதையும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்.
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியில் உருவாகும் ராகு-சுக்கிரன் திரிகிரஹி யோகம்..! என்னென்ன பலன்கள்?
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சனி அதிர்ஷ்டத்தை சாதகமாக்குவார். பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சில முக்கியமான வேலைகள் முடிவடையும். சில முக்கியமான வேலைகளை முடித்த மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு அனுகூலமான காலமாகும்.
துலாம் ராசி: துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன் என்பதால், சனி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். இந்த முறை சனி ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி, மரியாதையை தரும். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமான பயணத்தையும் மேற்கொள்ளலாம்.
மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியான சனி இந்த ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர். இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பார்கள். உயர் பதவி பெறலாம். உங்கள் புகழ் எங்கும் பரவும். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு அதிபதியான சனி தற்போது இந்த ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் மூலம் கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
சனி ஜெயந்தி வழிபாடு
* சனி பகவானின் கோவிலுக்கு சென்று, அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* "ஓம் ஸம் சனீஸ்வராய நமக" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
* சனி பகவான் ஆலயங்களுக்கு சென்று வழிபடவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்
மேலும் படிக்க | 22 நாட்களில் நடக்கப்போகும் அபூர்வ பெயர்ச்சி..! 5 ராசிகளுக்கு பம்பர் லாட்டரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ