ஜூலை 7-ம் தேதி சூரியனும் புதனும் மிதுன ராசியில் ஒன்றாக இணைகின்றனர். இந்த ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல யோகங்கள் உருவாகி வருகிறது. அதன்படி ஜூலை 7ஆம் தேதி புதன் ரிஷபம் ராசியை விட்டு விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதேபோல் சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சூரியன், புதன் ஜோடி பல ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தைத் தருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சூரியன் கிரகம் ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, உயர் சேவை ஆகியவற்றைக் குறிப்பவராகவும், புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகின்றனர். எனவே சூரியன்-புதன் இணைதல் எந்த ராசிகளில் என்ன பலன் தரும் என்பதை இங்கே அறிலாம்:


மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்களால் குபேரனின் அருளை முழுமையாக பெறப்போகும் சில ராசிகள் 


கும்பம்: சூரியன், புதன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு சுப யோகம் உருவாகி வருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சுப வேலைகள் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், பணம் பெறுவதற்கான முழு அறிகுறிகளும் இந்த ராசியினருக்கு இருக்கிறது.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் புதன் சேர்க்கை நல்ல பலன்களை பெற்று தரும். அத்துடன் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பின் பலனை முழுமையாக இப்போது பெறுவார்கள். இத்தனை நாள் இந்த ராசிக்காரர்கள் செய்த கடின உழைப்புக்கு, அதற்கான பலன் கிடைக்கும் நேரமிது.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை கையாளலாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். ஆனால் முதலீடு செய்வதற்கு முன், நன்கு புரிந்துக்கொண்டு செய்யவும்.


மிதுனம்: மிதுன ராசியினருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு கெட்ட காரியங்கள் நடக்காமல் இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் ராசிகள் இவை: உங்க ராசி என்ன 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR