கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் பார்வையில் ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.  ஏனெனில் இந்த மாதம் சில பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படப் போகிறது.  மாத தொடக்கத்தில் புதன் மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு ஜூன் 7-ம் தேதி இடம் பெயர்கிறார், மறுபுறம் ஜூன் 15-ம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சூரியன் பிரவேசிக்கிறார்.  இது தவிர சனிபகவான், ஜூன் 17 அன்று தனது சொந்த ராசியில் இருக்கிறார்.  ஜூன் 24 அன்று, புதன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார்.  இதனுடன், மிதுனத்தில் புதன் மற்றும் சூரியன் இணைவு உருவாகும்.  அடுத்ததாக மாத இறுதியில் செவ்வாய் ஜூன் 30-ம் தேதி சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்.  ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜூன் மாதத்தில் ஐந்து ராசிக்காரர்களுக்கும் இதுபோன்ற கிரகங்களின் சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்: இன்னல்களை சந்திக்கும் இந்த 3 ராசிகள் - ஜூலை 1 வரை ஜாக்கிரதை...!


1. மேஷம்:


மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் கிரகங்களின் ராசி மாற்றம் நன்மை தரும்.  ராசி மாற்றத்தின் காரணமாக நீங்கள் முன்பை விட வலுவாகவும், தீவிரமாகவும், நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.  எல்லாப் பணிகளையும் மிகவும் திறமையாகச் செய்வீர்கள், பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.  நிலம் அல்லது சொத்துக்களை வாங்கி விற்பதன் மூலமும் நல்ல லாபம் கிடைக்கும்.  காதல் விவகாரங்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும், உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.


2. மிதுனம்:


உங்கள் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சாதகமாக இருக்கும், நல்ல எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பான தெளிவு அதிகரிக்கும்.  உங்கள் துறையில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள்.  அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உங்கள் இமேஜ் நன்றாக இருக்கும்.  இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளும் பயணம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் கிரகங்களின் சஞ்சாரம் கல்விக்கு நல்ல பலன்களைத் தரும்.


3. கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நன்றாக இருக்கும், பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது, புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும்.  உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும், இருப்பினும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.  நேரத்தை வீணாக்காமல் வேலையில் கவனம் செலுத்துங்கள், இந்த நேரம் திருமண வாழ்க்கைக்கு நல்லது மற்றும் மாணவர்களுக்கு இது சாதகமான நேரம்.


4. துலாம்:


ஜூன் மாதம் உங்களுக்கு இனிமையான மாதமாக இருக்கும், அதிர்ஷ்டம் உங்களுக்கு மழை போல பொழியும். மற்றும் உங்கள் விருப்பப்படி நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.  வேலையை பொறுத்தவரையில் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.  இந்த நேரத்தில், மத ரீதியான விஷயங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். மேலும் இந்த நேரத்தில், எந்த முடிவையும் கவனமாக எடுப்பது நல்லது மற்றும் எந்தவொரு சட்டச் சிக்கலில் இருந்தும் உங்களை விலக்கிக் கொள்ளுங்கள், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.


5. மகரம்:


மகர ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் பொருளாதார நிலை மேம்படும், நிலம் தொடர்பான விஷயங்கள் நல்ல பலனைத் தரும்.  இந்த நேரம் சொத்து வாங்க அல்லது விற்க உங்களுக்கு சாதகமாக இருக்கும், வேலை பார்க்கும் இடத்தில உங்களின் உற்சாகமும் திறமையும் அதிகரிக்கும்.  எந்த ஒரு வேலையையும் அவசரமாக செய்வதையோ அல்லது எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படம், நல்ல செய்திகள் செவிகளுக்கு வரும் மற்றும் இந்த மாதம் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | ராகு கேதுவினால் வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ