Guru Vakri In Vrishabh: ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். அந்த வகையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வன், கல்வி, குழந்தை பாக்கியம் மற்றும் செழிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் கடந்த மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குரு பெயர்ச்சியானது ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அந்த வகையில் சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் பயணித்து வரும் குரு கிரகம் அடுத்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனிடையே வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து பிப்ரவரி 25 வரை இதே நிலையில் பயணிப்பார். குருவின் இந்த வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சுப யோகத்தை தரும். எனவே அக்டோபர் 9 ஆம் தேதி, காலை 10:01 மணிக்கு, குரு ரிஷபத்தில் வக்ர நிலையில் நகரும். இது எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலனைத் தரும் என்று தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி, அனைத்திலும் வெற்றி, பொற்காலம் இந்த ராசிகளுக்கு


மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி நல்ல பலனளிக்கும். இந்த காலகட்டத்தில் வணிகம் மற்றும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை திரும்ப பெற முடியும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். ஆசைகள் நிறைவேறும். 


கடகம் (Cancer Zodiac Sign): ஜோதிடத்தின்படி, குரு வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். செல்வம் பெருகும். அதிர்ஷ்ட மழை கொட்டும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். வெற்றி கதவுகள் திறக்கப்படும். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் பல புதிய திட்டங்களைத் தொடங்குவதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். பதவி உதவியுடன் கௌரவமும் உயரும்.


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): குரு வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருக்கும், அன்பு அதிகரிக்கும். வியாபாரத்திலும் லாபம் பெருகும். அறிவும் ஆற்றலும் பெருகும். தடைபட்ட வேலைகள் முடிவடையும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 9 முதல் 15 2024 வரை, 12 ராசிக்கான பலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ