இந்து மதத்தில் அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இவற்றில் சில அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இப்போது இர இருக்கும் அமாவாசை நாளில் ஒன்றல்ல...மூன்று விசேஷங்கள் வருவதால் ஜயேஷ்ட மாத அமாவாசை மிகவும் விசேஷமானது. சனி ஜெயந்தியும், ஜ்யேஷ்ட அமாவாசை நாளில் வருகிறது, இந்த நாளில் திருமணமான பெண்கள் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஜ்யேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு ஜ்யேஷ்ட அமாவாசை மே 19 ஆம் தேதி வருகிறது. அதாவது மே 19 ஆம் தேதியே சாவித்திரி விரதம் அனுசரிக்கப்படுவதுடன், சனி ஜெயந்தியும் கொண்டாடப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதமும், சனி பகவான், விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் ஆசியும் கிடைக்கும்.


மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!


2023 ஜயேஷ்ட அமாவாசை எப்போது?


ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் பாவங்கள் நீங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் கண்டிப்பாகச் தர்ப்பணம்  செய்வது, முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஜ்யேஷ்ட அமாவாசை திதி மே 18, 2023 அன்று இரவு 9.42 மணிக்கு தொடங்கி மே 19, 2023 அன்று இரவு 9.22 மணிக்கு முடிவடையும். உதயதிதியின்படி மே 19 வெள்ளிக்கிழமை ஜ்யேஷ்ட அமாவாசையாகக் கருதப்படுகிறது.


அமாவாசை பரிகார நேரம்


ஜ்யேஷ்ட அமாவாசை அன்று நீராடும் நேரம் - காலை 05.15 முதல் மாலை 04.59 வரை


சாவித்திரி பூஜை முஹூர்த்தம் - காலை 05.43 முதல் 08.58 வரை


சனி பகவான் பூஜை முஹூர்த்தம் - மாலை 06.42 முதல் 07.03 வரை


ஜயேஷ்ட அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்:


* ஜயேஷ்ட அமாவாசை நாளில் புனித நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுங்கள். மேலும் சூரியபகவானுக்கு அர்க்யா அர்ச்சனை செய்யவும்.


* அமாவாசை தினத்தன்று பாயும் நீரில் கருப்பு எள்ளைப் விட்டால் பல தொல்லைகள் நீங்கும்.


* முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் அமாவாசை நாள் முக்கியமானது. இந்நாளில் குளித்த பின் தானம் செய்யவும்.


* ஜயேஷ்ட அமாவாசை நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக யம தேவதையை வைத்து வழிபட வேண்டும்.


* சனி தேவன் ஜயேஷ்ட அமாவாசை அன்று பிறந்தார். சனி ஜெயந்தி அன்று சனிதேவருக்கு கடுகு எண்ணெய், கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல நிற மலர்களை சமர்பிக்கவும். சனி மந்திரத்தை உச்சரிக்கவும்


மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ