கேதாரகெளரி விரத மகிமை! விரதத்தால் இறைவனின் இடபாகத்தை சொந்தமாக்கிக் கொண்ட உமை அன்னை!
Arthanareeswarar And Kedaragowri Vratham: குரோதி ஆண்டில் கேதாரகெளரி விரதம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? விரதம் இருந்தால் என்ன பலன்? முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக வழிபடப்படுபவர். அன்னையும் அப்பனும் ஒன்றாக இருக்கும் நிலையை உணர்த்தும் சிவ தத்துவம் அர்த்தநாரீஸ்வர். கணவனும் மனைவியும் மனமொத்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது கேதார கெளரி விரதம். சிவனை அணுவளவும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாள் மேற்கொண்ட இந்த விரதத்தை, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மேற்கொள்ளலாம்.
கேதார கெளரி விரதம் மற்றும் பூஜை செய்யும் முறை
கேதார கெளரி விரத பூஜை தொடங்கும் முன், மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்துவிட்டு, பூஜையைத் தொடங்கலாம். அம்மியையும், குழவியையும் சுத்தம் செய்து, ஒன்றன் மீது ஒன்றை வைக்க வேண்டும். அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் பூசி, பூக்கள் சூட்டி அலங்கரிக்க வேண்டும். சிவனையும், பார்வதி தேவியையும் ஆவஹனம் செய்துவிட்டு, `ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் என பிரசாதத்தை நிவேதித்து, தீப, தூப ஆராதனைகள் செய்ய வேண்டும்.
அர்த்தநாரீஸ்வரராக பார்வதிக்கு இடப்பாகம் கொடுத்த விரதம்
இந்த கேதாரகெளரி விரதத்தை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தில் இடம் பிடித்து சிவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தார். பரமேஸ்வரனை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும். அவரைப் பிரியாமல் அவருடனே ஐக்கியமாகிவிட வேண்டும் என்று உமையாள் விருப்பம் கொண்டார்.
திருக்கேதாரம் என்ற திருத்தலத்த்திற்கு சென்று, கவுதம முனிவரை சந்தித்து தனது ஆசையை உமாதேவி சொன்னதும், முனிவர், அம்பிகை உமாதேவிக்கு சொல்லிக் கொடுத்த விரதம் கேதார கௌரி விரதம்.
மேலும் படிக்க | புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!
புரட்டாசியில் விரதம்
புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, அமாவாசை வரும் வரையிலும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். விடியலில் குளித்து முடித்து, 21 இழைகள் கொண்ட சரடை, இறைவனை நினைத்து சங்கல்பம் செய்து, இடது கையில் கட்டி கொள்ள வேண்டும். சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்.
ஒருசந்தி விரதம் இருக்க வேண்டும். பகலில் உணவு உண்ணாமல், சூரியன் மறைந்தபின் இரவில் மட்டும் ஒரு வேளை உண்ண வேண்டும். இரவில் படுக்கையில் படுக்காமல் தரையில் தூங்க வேண்டும். தேய்பிறை சதுர்தசி அன்று கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பூஜை செய்யும்போது, அந்த இடத்தில், ஒரு மரக்கால் அளவு செந்நெல்லை சதுரமாகப் பரப்பி, அதன் நடுவே ஓம் என்ற பிரணவ எழுத்தை எழுதி, அதன் நடுவில் பூர்ண கும்பம் வைக்க வேண்டும்.
கும்பத்தில் தர்ப்பையை சாற்றி, கும்பத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு முறையாக பூஜை செய்து துதிப்பாடல்களை பாடி இறைவனை வணங்க வேண்டும். சதுர்த்திசியில் பூஜை முடிந்த பிறகு, மறுநாள், முன்னால் கையில் கட்டிக்கொண்ட சரடை அவிழ்த்துவிடலாம்.
கவுதம முனிவர் உபதேசித்த கேதாரகவுரி விரதத்தை அம்பிகை உமாதேவி சரியாக கடைபிடித்ததால், பரமேஸ்வரர் மனம் மகிழ்ந்து, தன்னுடைய இடப்பாகத்தை உமையாளுக்குக் கொடுத்தார். இந்த புரட்டாசியில் ஆண் பெண் என யாராக இருந்தாலும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கேதார்கெளரி விரதம் இருந்து விரும்பியவற்றை அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ