நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!
Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும். கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
கேது பகவான் சிறப்பும் முரண்பாடுகளும்: நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்றாலும், இருவரின் இயல்பும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். ராகுவின் செயல்களால் கேது தூண்டப்பட்டால், கேதுவின் செயல்களால் ராகுவும் மறைமுகமாக தூண்டப்படுகின்றன. ராகுவும் கேதுவும் 180* நேர் எதிர் திசையில் பயணிக்க கூடிய இரட்டை கிரகங்கள் என்பதும் வித்தியாசமான ஆனால் நிதர்சனமான ஒன்று.
ராகு தசையில் கேதுவின் வெளிப்பாடு இருப்பதைப் போலவே, கேது தசை புக்தி காலத்தில் ராகுவின் வெளிப்பாடும் இருக்கிறது என்பதும், நிழல் கிரகங்களாக இருந்தாலும், தனக்கென்று சொந்த வீடு இல்லாத ராகு கேது உடன் நெருங்கும் கிரகங்களின் வலிமையை இந்த இரு கிரகங்களும் குறைத்துவிடும் என்பதும் ஆச்சரியமான உண்மை.
மேலும் படிக்க | ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!
கேதுவின் வீரியம்
கேதுடன் இணைந்த கிரகம் தன்னை சுருக்கிக் கொள்ளும் என்றபோதிலும், கேது எந்த கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் உச்சபட்ச அம்சங்களையும் கொடுக்காமல் இருப்பதில்லை. ஆசைகளை அதிகரிக்கும் வேலையை ராகு செய்தால், அதற்காக முயற்சிகளை எடுத்தாலும் முயற்சிகளை முறியடிப்பது கேதுவாகவே இருக்கிறது.
அதிலும், கேது தசையில், ராகுவினால் சில விஷயங்கள் தூண்டப்பட்டால், அந்த விஷயத்தில் உச்சபட்ச நிம்மதியைக் கொடுப்பதும் அல்லது விரக்தியை கொடுப்பதை கேது செய்வார். அதேபோல, நல்ல இடத்தில் அமர்ந்திருக்கும் கேது, ஞானத்தை வெளிப்படுத்துவதற்கான காரியங்களை செகேது தசை காலம்ய்வார். அதனால் தான் அறிவை வளர்க்கக்கூடிய திறனை அல்லது ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு கேதுவின் பலம் அவசியம் என சொல்லலாம்.
ஒரு விஷயத்தை கூட்டவும், குறைக்கவும் செய்யும் திறமையும் கேதுவுக்கு உண்டு. மற்ற கிரகங்களுடன் சேரும்பொழுது ,இணைந்த கிரகத்தின் காரகத்துவ ஆதிபத்திய பலனை சேர்த்து செய்யும். அனைத்தையும் கொடுத்தும் கெடுத்தும் கர்மவினைகளை கொடுக்கும் கிரகமான ராகு கேதுவின் தன்மையை எட்டாம் பாவகம் சொல்ல்விடும். அதிலும், கேது லக்ன சுபர்களின் தொடர்பை பெறும் பொழுது திடீர் பொருளாதார முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. இருந்தாலும், இறுதியில் அனுபவிக்க முடியாத தன்மையை அல்லது அதன் விளைவை வெறுக்கத்தக்க மனநிலையை கொடுத்துவிடுகிறார் ராகு.
சக்திவாய்ந்த கிரகமான கேது, ஆன்மீக அறிவு, ஞானம் மற்றும் பொருள் உலகில் இருந்து பற்றின்மை ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பதால், மனமுதிர்ச்சி, மனப்பக்குவம் மட்டுமல்ல, மன அழுத்தம், மனோவியாதிகள், மனச்சிக்கல்கள், புத்தி சுவாதீனம், அதிபுத்திசாலித்தனம் என மனதில் ஏற்படும் அனைத்துவிதான நிலைகளுக்கும் கேது காரணமாகிறார்.
ஆனால், தன்னை வணங்குபவர்களுக்கு மன ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கேது கொடுப்பதாக நம்பப்படுகிறது. ஜாதகத்தில் கேது மோசமாக இருந்தால், ஒருவர் தனது வருத்தங்களை வெளிப்படுத்தாமல், தங்களுக்குள் வைத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். இப்படி கேதுவினால் ஏற்படும் சிக்கல்களை நீக்க நவகிரக நாயகர் சிவபெருமானை வணங்கினால், கேதுவின் அசுப பலன்கள் குறையும்.
அதுமட்டுமல்ல, கேதுவின் கெட்ட பலன்களைக் குறைக்கவும், நற்பலன்களை அதிகரிக்கவும் விநாயகரை வழிபடலாம். அதிலும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது விநாயகரின் அருளைப் பெற்றுத் தருவதோடு, கேதுவின் தாக்கத்தையும் குறைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ