திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் என்று சொல்கிறோம். ஆனால் சரியான வயதில் திருமணம் என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. மாங்கல்ய தோஷம், உட்பட பல தோஷங்கள், ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பது, குரு பார்வை இல்லாதது, சுக்கிரன் வலுவிழந்து இருப்பது அல்லது ஜாதகத்தில் நவாம்ச தோஷம் என திருமணம் தாமதமாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமண தடை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பெற்றோருக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் ஆகவில்லை என்பது ஏற்படுத்தும் மன அழுத்தம் பலரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது.
ஒந்தவொரு பிரச்சனைக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் தீர்வுகள் உள்ளன. திருமணத் தடைகள் நீங்க செய்ய வேண்டிய வழிபாடுகளில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்
வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாடு
வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால் விளக்கேற்றி அம்மனை வழிபட வேண்டும். 'சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே' என்ற மந்திரத்தைக் குறைந்தது 27 முறை சொல்லி அன்னை லட்சுமியை வழிபட வேண்டும். இப்படி 27 நாட்கள் வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்.
சிவராத்திரி வழிபாடு
சிவராத்திரி நாளன்று, நாம் அறியாமல் செய்த பூஜைகளும் உதவிகளும் கூட அமோகமான பலன்களை அளிக்கும் என்று சொல்வார்கள். ஒரு மகா சிவராத்திரி (மாசி மாத சிவராத்திரி) நாளன்று செய்யும் பூஜையானது, 1008 சிவராத்திரிகளில் பூஜித்து கிடைத்த முழு பலனும் ஒரு மஹா சிவராத்திரி பூஜையில் பூஜிப்பதால் கிடைத்துவிடும். எனவே, திருமணத் தடை இருப்பவர்கள், மஹா சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் திருமணத் தடை நீங்கும்.
சப்தகன்னியர் வழிபாடு
பிரம்மா, சிவன், முருகன், வராக மூர்த்தி, விஷ்ணு, இந்திரன், எமன் போன்றவர்களின் அம்சம் பொருந்திய கன்னிகளாக உருவெடுத்த அன்னை பராசக்தியை வழிபடும் முறை சப்த கன்னிகள் வழிபாடுகள். சப்த கன்னிகளை நாம் முறையாக வழிப்பட்டால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்
அதேபோல, குடும்பத்தில் சாபம் ஏற்பட்டு இருந்தாலும் தோஷங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் நீங்க சப்த கன்னிகளை வழிப்பட வேண்டும். எந்த காரணத்தினால் திருமணம் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதே தெரியாமல் இருப்பவர்களும் சப்த கன்னிகளை வழிபட திருமண தடை விலகும்.
சப்த கன்னிகள் வழிபாட்டை வெள்ளிக்கிழமை நாளில் செய்வது சிறந்தது. கோவிலுக்கு சென்று பால், பன்னீர், இளநீர் வாங்கிக் கொண்டு போய் தாங்களே அபிஷேகம் செய்ய வேண்டும்.
சப்த கன்னியரின் முன்னால், இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, இரண்டு வாழைப்பழம், சிறிது பூக்கள் என ஏழு சப்த கன்னிகளுக்கும் வைத்து படையலிடவும். அதேபோல 7 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றிய பிறகு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகுக் ஒவ்வொரு சப்த கன்னிகளின் பெயரையும் 11 முறை கூறி அவர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.
இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் சப்த கன்னிகளின் வழிபாட்டை மேற்கொண்டால், எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் சாபமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் நடந்தேறி மகிழ்ச்சியான வாழ்க்கை வாய்க்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ