இன்னும் மூன்று மாதங்களில் மே மாதம் தொடங்கப் போகிறது. இந்த ,மாதம் குரு மற்றும் கேதுவின் சேர்க்கை நடந்து நவபஞ்சம் ராஜயோகம் உருவாகப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவபஞ்சம ராஜயோகம் 2024 : ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நட்சத்திரகளின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஏதேனும் கிரகத்தின் ராசியை மாற்றம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகிறது. இந்த வரிசையில் தற்போது வருகிற மே மாதம் நவபஞ்சம ராஜயோகம் உருவாகப் போகிறது.


கேது குரு சேர்க்கையால் மே மாதம் நவபஞ்சம யோகம் உண்டாகும் :
வேத ஜோதிடத்தின் படி, தற்போது கேது கன்னியில் பெயர்ச்சி அடைகிறார். அதேசயம் குரு அதன் சொந்த ராசியான மேஷத்தில் அமைந்திருக்கிறார். வருகிற மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குள் குரு பெயர்ச்சி அடையப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரங்கள் சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் சேர்க்கை உருவாகும். இதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தின் படி நவபஞ்சம ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். இருப்பினும் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட உண்டாகும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம்...


மேலும் படிக்க | அங்காரக தோஷத்தை உருவாக்கும் செவ்வாய் சனி நட்பால் சின்னபின்னமாகப்போவது யார்?


மிதுனம் (Gemini Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். மிதுன ராசி அரசியல்வாதிகளுக்கு நல்ல காலம் அமையும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு மூலம் பலன் கிடைக்கும். அபரிமிதமான செல்வம் பெருகும். கடன் தொல்லை நீங்கும். மூதாதையர் சொத்துக்களால் நிதிப் பலன் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறலாம். 


சிம்மம் (Leo Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் தரும். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். பணம் வரவு ஏற்படும். தடைபட்ட பணிகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். தொழிலிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்ட விஷயங்களில் இதுவரை கிடைக்காத வெற்றி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம், அல்லது சொத்து வாங்கலாம். வெளியூருக்கு சுற்றுலா செல்லலாம்.


துலாம் (Libra Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு ,லாபகரமான் பலனைத் தரும். வேலையில் டார்கெட்டை முடித்து வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், இதனால் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வரப்போகிறது குரு பெயர்ச்சி: குருதசை, பணம், அதிர்ஷ்டத்தை பெறப்போக்கும் ராசிகள் இவைதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ