சுக்கிரன் பெயர்ச்சி 2023 பலன்கள்: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றும். இது சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும். அந்தவகையில் இன்று மே 30ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். செல்வம், உடல் மகிழ்ச்சி, ஆடம்பரம், காதல், ஈர்ப்பு, ரொமான்ஸ் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சந்திரனின் ராசியான கடக ராசியில் நுழைகிறார். இதனால் ஐந்து ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை எழுப்பும். இந்த மிகப்பெரிய பெயர்ச்சி மே 30 ஆம் தேதி சரியாக இரவு 07.51 மணிக்கு கடக ராசிக்குள் நடக்கும். இதன் காரணமாக லக்ஷ்மி யோகம் உருவாகப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசிக்காரர்கள் லட்சுமி யோகத்தால் சிறப்பான செல்வத்தைப் பெறுவார்கள். சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் லட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.  மேலும் அடுத்த மாதம் ஜூலை 6 ஆம் தேதி வரை கடக ராசியில் தான் இருப்பார். இது சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை தரும். எனவே இந்த சுக்கிரன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் பெயர்ச்சி 2023 இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்கையை தரும்


ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். அத்துடன் சுக்கிரன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஆக்கப்பூர்வமான செயல்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். துணையுடன் உறவு வலுவாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | அடுத்த 7 நாட்கள் இந்த ராசிக்காரர்கள் ஜாலியாக இருப்பார்கள், கஷ்டங்கள் நீங்கும்


கடக ராசி: சுக்கிரன் தனது ராசியை மாற்றி கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசிக்காரர்கள் தங்கள் அழகு, உடை, அலங்காரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணி நிறைவு பெறும். மரியாதையும் செல்வமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.


கன்னி ராசி: சுக்கிரனின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையை அன்பால் நிரப்பும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பார்கள். நெருங்கியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.


விருச்சிக ராசி: சுக்கிரனின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். பொருளாதார நிலை மேம்பட்டு பெரும் நிம்மதியை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சமயப் பணிகளில் போக்கு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.


மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சுப பலன்களைத் தரும். உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். காதல் உறவுகள் வலுவாக இருக்கும், திருமணம் செய்ய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்த சூரியன் - 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்..! பண மழை நிச்சயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ