வாழ்வில் மங்களம் பொங்க... ராசிக்கு ஏற்ற தானங்களை பொங்கல் தினத்தில் செய்யுங்கள்!
மகர சங்கராந்தி 2023: 2023 ஆம் ஆண்டில், மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் நிலையில், சூரிய பகவானை மகிழ்விக்க, உங்கள் ராசிப்படி தானம் செய்தால் வாழ்வில் மங்களம் பொங்கும்.
ராசிப்படி மகர சங்கராந்தி தானம்: 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. கிரகங்களின் ராஜாவான சூர்யதேவன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தால், ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் உங்கள் ராசிப்படி இவற்றை தானம் செய்தால் கிரக தோஷங்கள் நீங்கி சூரியப் பெயர்ச்சியும் நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
மகர சங்கராந்தியன்று காலையில் நீராடி, துறவிகளுக்கும் ஏழைகளுக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதும், செய்த செயல்கள் சிறப்பானதாக கருதப்படுவதும் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம். தானம் செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும். அதிலும் ராசிக்கு ஏற்றபடி தானம் செய்வது மேலும் சிறப்பு. எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன என்ன பொருட்களை தான தர்மம் செய்வது சிறப்பாக இருக்கும் என்பதை அறியலாம்.
மேலும் படிக்க | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி!
- மேஷ ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி தினத்தன்று சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். எள் அல்லது கொசுவலை தானம் செய்வது நன்மை பயக்கும்.
- ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த நாளில் வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். ஏழைகளுக்கு ஆடைகள் மற்றும் கருப்பு எள் தானம் செய்யுங்கள்.
- மிதுன ராசிக்காரர்களும் வெண்ணிற ஆடை அணிந்து காகம், மீன்களுக்கு உணவளிக்க வேண்டும். கொசுவலை தானம் செய்ய வதும் சிறப்பு.
- கடக ராசிக்காரர்கள் காவி நிறத்தை அணிய வேண்டும். மேலும், நீங்கள் ஆடைகள், எள் மற்றும் புட்டு அல்லது பொங்கல் ஆகியவற்றை ஏழைகள் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- சிம்ம ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். எள், போர்வை போன்றவற்றையும் தானம் செய்யலாம்.
- கன்னி ராசிக்காரர்கள் நீல நிற ஆடை அணிந்து எள், போர்வை, எண்ணெய் தானம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?
- துலாம் ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். எண்ணெய், வஸ்திரம் மற்றும் பருத்தியை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
- விருச்சிக ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். கோவிலுக்கு வேண்டிய பொருட்களை தான்ம செய்யலாம். பொங்கல் தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக கொடுங்கள்.
- தனுசு ராசிக்காரர்கள் காவி அல்லது மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம். இதனுடன், பருப்பு, எண்ணெய் அல்லது மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.
மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்
- மகர ராசிக்காரர்கள் வெளிர் நீலம் அல்லது ஆகாயம் அணிந்து அரிசி, பருப்பு, மாவு ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
- கும்ப ராசிக்காரர்கள் நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து எண்ணெய், சீப்பு, சோப்பு போன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
- மீன ராசிக்காரர்கள் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். மேலும், நீங்கள் எண்ணெய், கருப்பு எள், போர்வை அல்லது ஆடைகளை தானம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு பம்பர் பரிசு, காப்பீட்டு வரிமுறையில் மாற்றம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ