பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்!
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய - ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை.
மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.
மகாசிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை:
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
மஹா சிவராத்திரி வழிபாட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிரசாதம் செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும். எண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் படிக்கலாம், கேட்கலாம். சிவஸ்துதிகளை உச்சரித்து ஐயனை வணங்கலாம். இரவு கண்விழித்து சிவபூஜை செய்யவேண்டும். ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி, வில்வ இலைகளைக் கொண்டு லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாம்.
அம்மனுக்கு நவராத்திரி போல சிவபெருமானுக்கு மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.
சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும். மஹாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கலாம். வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.
மகாசிவராத்திரி அன்று செய்யக் கூடாதவை:
1. மகா சிவராத்திரியின் புனிதமான சந்தர்ப்பத்தில், பக்தர்கள் அரிசி, கோதுமை அல்லது பருப்பு வகைகளில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. மகா சிவராத்திரி நாளில் இறைச்சி, கோழி மற்றும் பிற அசைவ உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இது தவிர, தாமச குணம் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
3. மகா சிவராத்திரி நாளில் மது அருந்தக் கூடாது.
மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ